சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட் + "||" + Vanavil : Google's Pixel Slate

வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட்

வானவில் : கூகுளின் பிக்ஸெல் ஸ்லேட்
வித்தியாசமாக, மற்றவர்களைவிட தொழில்நுட்பத்தில் மேம்பட்டதாக தனது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் கவனமாக உள்ளது.
இந்நிறுவனம் தனது ஆண்டு விழாவில் பிக்ஸெல் ஸ்லேட் எனும் டேப்லெட், ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனம் வெளியிடும் முதலாவது டேப்லெட் இதுவாகும். குரோம் இயங்குதளத்தில் வெளிவந்துள்ள இந்த டேப்லெட் 10 மணிநேரம் தொடர்ந்து செயல்படும் வகையிலான பேட்டரி தன்மை கொண்டது. 

இதில் முன்பக்கத்தில் இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன. தொடு திரை மூலம் இதை செயல்படுத்தலாம். இது தவிர பிக்ஸெல் பேனாவும் அளிக்கப்படுகிறது. இந்த இயங்குதளம் இருப்பதால் ஆண்ட்ராய்டு செயலி மற்றும் கூகுள் பிளே ஸ்டோருக்கு எளிதில் அணுகும் வசதி கிடைக்கும்.

பிக்ஸெல் ஸ்லேட் விலை ரூ. 44,400 இருக்கும் என்று கூறப்படுகிறது. கருநீல வண்ணத்தில் இது வந்துள்ளது. இந்த டேப்லெட்டை வாங்குவோருக்கு 3 மாதத்துக்கு யூ -டியூப் டி.வி. சந்தா கிடையாது. பிக்ஸெல் ஸ்லேட் டேப்லெட்டை செயல்படுத்துவதற்கான கீ போர்டு வேண்டுமெனில் அதைத் தனியாகத்தான் வாங்க வேண்டும். 

அது தேவைப்படாதவர்கள் தொடு திரை மூலம் செயல்படுத்திக் கொள்ளலாம். கீ-போர்டு தனியாக வாங்கினால் அதன் விலை ரூ. 14,700 ஆகும். பிக்ஸெல் பேனா விலை ரூ. 7,300 ஆகும். அமெரிக்காவிலேயே இந்த ஆண்டு இறுதியில்தான் இது விற்பனைக்கு வர உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : எல்.ஜி.யின் ஸ்மார்ட் ரெப்ரிஜிரேட்டர்
இது ஸ்மார்ட்டான உலகம். உங்களது வீட்டு உபயோக பொருட்களும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
2. வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.
3. வானவில் : ஆபத்து கால விசில்
அவசர காலத்தில் நாம் இருக்குமிடத்தை அடையாளம் காட்டி மீட்பர்களை அழைக்க உதவுகிறது விசில்.
4. வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்
புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
5. வானவில் : நில நடுக்கத்தை கண்டுபிடித்து ‘அலெர்ட்’ செய்யும் அற்புத ‘ஆப்’
இயற்கை பேரழிவுகளை தவிர்க்க முடியாது. நிலநடுக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே நமக்கு நடுக்கம் ஏற்படும்.