மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு


மத்திய அரசு துறைகளில் மொழிபெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
x
தினத்தந்தி 5 Nov 2018 5:00 AM GMT (Updated: 5 Nov 2018 12:33 AM GMT)

மத்திய அரசு துறைகளில் மொழி பெயர்ப்பாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய அரசு துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள ஜூ‌னியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், ஜூ‌னியர் டிரான்ஸ்லேட்டர், சீனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் மற்றும் இந்தி பிரத்யாபக் போன்ற பணிகளுக்கான தேர்வு-2018 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வின் மூலம் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிடங்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது விரும்பு

விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்ட வராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

மொழிசார்ந்த பாடங்களில் முதுநிலை படிப்பு படித்தவர்கள், பட்டப் படிப்புடன் மொழி பெயர்ப்பு டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், மொழி பெயர்ப்பு பணியில் அனுபவம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

கட்டணம்


பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 19-11-2018-ந் தேதியாகும். வங்கி வழியாக கட்டணம் செலுத்த கடைசிநாள் 26-11-2018-ந் தேதியாகும். இதற்கான கணினி அடிப்படையிலான (தாள்1) தேர்வு 12-1-2019 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான விவரங்களை www.ssc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story