உங்களைப் பற்றிய கண்ணோட்டம் மாற வேண்டுமா?


உங்களைப் பற்றிய கண்ணோட்டம் மாற வேண்டுமா?
x
தினத்தந்தி 12 Nov 2018 9:17 AM GMT (Updated: 12 Nov 2018 9:17 AM GMT)

நீங்கள் தன்னம்பிக்கை கொண்ட மாணவரா? இல்லை, எதிர்காலத்தைப் பற்றிய பயம் உங்களிடம் இருக்கிறதா? தலைமைப்பண்பு உங்களிடம் உள்ளதா? இல்லை, அதை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

நீங்கள் வெற்றி மாணவராக திகழ இந்த சுய பரிசோதனை வழிகாட்டுகிறது. கேள்விகளுக்குச் செல்வோமா?...

1. உங்களால் நண்பர்களை எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியுமா?

அ. ஆம், இயல்பாக பழகுவேன்.

ஆ. இ்ல்லை, அவர்களாக பேசினால் பழகுவேன்.

இ. எனக்கு கூச்சம் அதிகம்.

2. உங்களுக்கு அருகில் இருக்கும் புதியவர் மீது நம்பிக்கை உள்ளதா?

அ. ஆம் நம்புவேன், ஏமாற மாட்டேன்.

ஆ. யாரையும் எளிதில் நம்பமாட்டேன்.

இ. அவர்களுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை.

3. உங்களால் சரியாக பள்ளிப்பாடங்கள் மற்றும் வீட்டு வேலைகளை முடிக்க முடிகிறதா?

அ. ஆம், சரியாக முடித்துவிடுவேன்.

ஆ. சிரமப்பட்டு முடிப்பேன்.

இ. கஷ்டப்படுகிறேன்.

4. உங்களுக்கு எளிதில் கோபம் வருமா?

அ. இல்லை

ஆ. கோபப்படுவேன்.

இ. நான் கோபக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

5. ஓவியங்கள் தேவையானது என கருதுகிறீர்களா?

அ. ஆம், ஓவியம் எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. என் மனதை சாந்தப்படுத்துகிறது.

ஆ. வரைய சிரமமாக இருக்கும். எளிதான ஓவியங்களை வரைவேன்.

இ. பாடங்களுக்காக ஓவியம் வரைய வேண்டி உள்ளதே?

6. மற்றவர்களை உங்களால் வழி நடத்த முடியுமா?

அ. ஆம், நான் சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடக்க வைக்க என்னால் முடியும்.

ஆ. நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள்.

இ. என் சொல் கேட்காதவர்களை எனக்குப் பிடிக்காது.

7. அடிக்கடி வருத்தமடைவீர்களா?

அ. இல்லை. வருத்தம் வந்துபோவது உண்டு.

ஆ. நிறைய விஷயங்களுக்கு வருந்தியிருக்கிறேன்.

இ. என்ன வாழ்க்கை இது என நினைக்கத் தோன்றுகிறது.

8. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியுமா?

அ. ஆம், கோபத்தையும், ஆசையையும் என்னால் கட்டுப்படுத்த முடியும்.

ஆ. கட்டுப்படுத்த நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை.

இ. எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ளமாட்டேன்.

9. மற்றவர்களுக்கு உதவி செய்வீர்களா?

அ. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்.

ஆ. உதவி செய்ய நினைப்பேன்.

இ. எனக்கு யாரும் உதவுவதில்லையே...

10.வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்களா?

அ. ஆம், அதில் உறுதியாக இருப்பேன்.

ஆ. எளிதில் வாக்கு கொடுக்கமாட்டேன்.

இ. நினைவிருந்தால் நிறைவேற்றுவேன்.

11.மற்றவர்களின் வித்தியாசமான செயல்பாட்டை அறிந்திருக்கிறீர்களா?

அ. ஆம், என்னைவிட சிறப்பாக செயல்படுபவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

ஆ. அவர்களால் எப்படி முடிகிறது என யோசிப்பேன்.

இ. மற்றவர்களை கவனிப்பதில்லை.

12.நீங்கள் எப்போதும் ‘பிஸி’யாக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?

அ. ஆம், வெற்றிப் பாதையை நோக்கி செயல்படுவேன்.

ஆ. ஆம். எப்போதும் பரபரப்பாகத்தான் இருக்கிறது.

இ. ஆம், நானும் ‘பிஸி’தான்.

13.விவாதம் செய்வதை விரும்புவீர்களா?

அ. ஆம், விவாத நிகழ்ச்சிகளை விரும்புவேன், பங்கெடுப்பேன்.

ஆ. விவாதம் பிடிப்பதில்லை.

இ. வாக்குவாதத்தில் என்னை தோற்கடிக்க முடியாது.

14. வாசிப்பதை நேசிக்கிறீர்களா? எதையும் கவனமாக படிப்பீர்களா?

அ. ஆம், எல்லாவற்றையும் வாசிப்பேன். முழுமையாக படிப்பேன்.

ஆ. பிடித்ததை மட்டும் படிப்பேன்.

இ. பாடம் படிப்பதே பெரிய வேலையாக இருக்கிறது.

15.அரசியலில் ஈடுபாடு உண்டா?

அ. அரசியலில் மாற்றங்கள் வேண்டும் என நினைப்பேன்.

ஆ. அரசியல் தெரியும், பிடிக்காது.

இ. அரசியல்வாதிகளுடன் பழக்கம் உண்டு. எனக்கு அரசியல் பிடிக்கும்.

இப்போது விடைகளுக்கு வருவோம். ‘அ’ பதில்களுக்கு 10 மதிப்பெண் வழங்குங்கள். ‘ஆ’ பதில்களுக்கு 5 மதிப்பெண் வழங்குங்கள். ‘இ’ பதில்களுக்கு 2 மதிப்பெண்கள் வழங்குங்கள். இப்போது மொத்த மதிப்பெண்களை கூட்டுங்கள். உங்கள் மதிப்பெண்களுக்கேற்ப உங்களை அடையாளம் காணுங்கள்...

உங்கள் மதிப்பெண்கள் 90க்கு மேல் 150 வரை இருந்தால்...

நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். சிறந்த மாணவராக வலம் வருகிறீர்கள். உங்களிடம் உள்ள நற்பண்புகள் உங்களை நாளைய தலைவராக உயர்த்தக்கூடியது. அனைவருடன் இணக்கமாகப் பழகும் பண்பு, ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் திறன், சூழ்ச்சிகளை முறியடிக்கும் பண்பு, வெறுப்பின்றி செயல்படும் ஆற்றல் போன்றவற்றை இன்னும் வளர்த்துக் கொண்டால் நீங்கள் எந்தத் துறையிலும் சிறந்த நிர்வாகியாக மிளிர்வீர்கள்.

உங்கள் மதிப்பெண்கள் 45 முதல் 90 வரை இருந்தால்...

நீங்கள் சுறுசுறுப்பானவர். நன்றாக கற்கும் ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் உங்கள் மனம் நம்பிக்கை இழந்து செயல்படுகிறது. மற்றவர்களிடம் ஏற்படும் நம்பிக்கைக் குறைவு உங்களை தனிமைக்குத் தள்ளுகிறது. பயத்தைப் போக்கினால் நீங்கள் நிறைய சாதிக்கக்கூடியவர். சக மாணவர்களோடு நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள், எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் நீங்களும் சாதனையாளராக உயரலாம்.

உங்கள் மதிப்பெண்கள் 45-க்குள் இருந்தால்...

அசாத்திய நம்பிக்கை கொண்டவர் நீங்கள். படிப்பதில் நாட்டம் குறைவாக இருந்தாலும் உங்களிடம் நம்பிக்கை நிரம்பி இருக்கும். தன்னைப் பற்றிய உங்களது அசட்டுத் துணிச்சல் பல நேரங்களில் வெற்றியைப் பெற்றுத் தரும். அதே வேளையில் அந்தப் பண்பே பல தோல்விகளிலும் உங்களைத் தள்ளக்கூடியதாக இருக்கும். துணிவு மிக்க நீங்கள் சாதுரியமாக செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கையையும், மற்றவர் நம்பிக்கையையும் சம்பாதித்தால் நீங்கள் இமயம் அளவு உயர்வீர்கள்.

Next Story