ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பாக்டீரியா புரதம்


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பாக்டீரியா புரதம்
x
தினத்தந்தி 24 Dec 2018 5:37 AM GMT (Updated: 24 Dec 2018 5:37 AM GMT)

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல் கலைக்கழக விஞ்ஞானிகள் பாக்டீரியா நுண்ணு யிர்களில் இருந்து ஒருவகை புரதத்தை பிரித்தெடுத்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் திரைகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் உதவும் உலோகப் பொருட்களை இணைக்க உதவும் பொருளாக இந்தப் புரதத்தை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிணைப்பு பொருளாக பயன்படுத்தும் லாந்தனைடுகளைவிட லட்சம் மடங்கு சிறப்பு பெற்றது இந்த புரதம். மேலும் இதைக் கொண்டு குறிப்பிட்ட உலோகப் பொருட்கள் இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடிக்கவும் முடியும். கார்பேட்டரி, லேசர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப தயாரிப்புகளிலும் இந்த புரதம் பயன்படும்.

Next Story