சிறப்புக் கட்டுரைகள்

டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நேரடி வரி வசூல் 14.1% அதிகரிப்பு + "||" + Direct tax collections increased by 14.1% in the nine months to December

டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நேரடி வரி வசூல் 14.1% அதிகரிப்பு

டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் நேரடி வரி வசூல் 14.1% அதிகரிப்பு
நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் 14.1 சதவீதம் அதிகரித்து ரூ.8.74 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

சொத்து வரி

நேரடி வரிகளில் நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும். மறைமுக வரிகள் போல் மற்றவர்கள் மீது சுமத்த முடியாது.

சென்ற நிதி ஆண்டில் (2017-18) நேரடி வரிகள் மூலம் ரூ.9.80 லட்சம் கோடி திரட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. எனினும் அந்த இலக்கைத் தாண்டி ரூ.10.03 லட்சம் கோடி வசூல் ஆனது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வரி வசூல் 18 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் நேரடி வரிகள் மூலம் மொத்தம் ரூ.8.74 லட்சம் கோடி மத்திய அரசு வருவாய் ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 14.1 சதவீதம் அதிகமாகும்.

ரீபண்டு

கணக்கீட்டுக் காலத்தில், ரூ.1.30 லட்சம் கோடி அளவிற்கு வரி ரீபண்டு செய்யப்பட்டு இருக்கிறது. இதனையடுத்து நிகர நேரடி வரி வசூல் ரூ.7.43 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது நிகர அடிப்படையில் வரி வசூல் 13.6 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

நிதிப்பற்றாக்குறையை குறைக்க வேண்டுமானால் வரி வசூலில் நிர்ணயித்த இலக்குகள் எட்டப்பட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய பட்ஜெட்டில் நடப்பு நிதி ஆண்டிற்கான (2018-19) நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் வரையிலான முதல் 8 மாதங்களில் ரூ.7.17 லட்சம் கோடி அளவிற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. முழு ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இலக்கில் இது 115 சதவீதமாகும்.