சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள்: ரசாயன நிறுவனத்தில்... + "||" + Employment News: In the chemical company ..

வேலைவாய்ப்பு செய்திகள்: ரசாயன நிறுவனத்தில்...

வேலைவாய்ப்பு செய்திகள்: ரசாயன நிறுவனத்தில்...
கேரளாவில், திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் (FACT) செயல்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 155 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெக்னீ சியன் பிரிவில் 57 இடங்களும், டிரேடு அப்ரண்டிஸ் பிரிவில் 98 இடங்களும் உள்ளன.

இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்புபவர்கள் 1-1-2019-ந் தேதியில் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1995-ந் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கெமிக்கல், கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னாலஜி, மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிட்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக் மோட்டார் வெகிகிள், பெயிண்டர், வெல்டர், கார்பெண்டர், சி.ஓ.பி.ஏ. போன்ற பிரிவில் ஐ.டி.ஐ., ஐ.டி.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பிரிவு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 23-1-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://fact.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. நிதி நிறுவனத்தில் 280 உதவியாளர் பணிகள்
மத்திய நிதி நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 280 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-
2. நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி
மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று நவோதயா வித்யாலயா சமிதி.
3. உருக்கு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
உருக்கு ஆலை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு கேட் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
4. தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான தேர்வு : 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
தமிழக அரசு துறைகளில் என்ஜினீயர்களுக்கான பணியிடங்களை நிரப்பும் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதன் மூலம் 475 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
5. பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு : ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியிடங்களில் ஆண்- பெண் பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 242 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

ஆசிரியரின் தேர்வுகள்...