சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகள்


சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகள்
x
தினத்தந்தி 4 Feb 2019 6:05 AM GMT (Updated: 4 Feb 2019 6:05 AM GMT)

தமிழகத்தின் பழம்பெருமை மிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். ஏராளமான கலை அறிவியல் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது தொலைதூர கல்வி முறையில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பி.ஏ., (தமிழ், தமிழ் இலக்கியம், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டரி), பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பி.காம்., (கார்பரேட் செக்ரட்ரிஷிப், பேங்க் மேனேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் அப்ளிகேசன்), பி.பி.ஏ. பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன், பி.சி.ஏ. கம்ப்யூட்டர் அப்ளிகேசன், பி.எஸ்சி., (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி) போன்ற இளநிலை கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே பட்டப்படிப்பு படித்தவர்கள் முதுநிலைப் படிப்புகளில் சேரலாம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஸ்டடீஸ், பொலிடிக்கல் சயின்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், ஹூமன் ரைட்ஸ் அண்ட் டியூடீஸ் எஜூகேஷன்), எம்.காம்., எம்.எஸ்சி., (மேத்மெடிக்ஸ், சைக்காலஜி, கவுன்சிலிங் சைக்காலஜி, சைபர் பாரன்சிக் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, இன்பர்மேஷன் டெக்னாலஜி), எம்.பி.ஏ., (பினான்ஸ் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், மார்கெட்டிங் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், சிஸ்டம் மேனேஜ்மெண்ட்), எம்.சி.ஏ. படிப்புகள் உள்ளன.

பல்வேறு டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளையும் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பள்ளிப்படிப்பில் குறிப்பிட்ட பாடங்களை தேர்வு செய்து படித்தவர்கள் இளநிலை படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேரலாம். ஒவ்வொரு படிப்புக்கும் தகுதி வேறுபடும். அவற்றை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம். நேரடியாகச் சென்றும் தகவல் பெறலாம்.

விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி நேரடியாகவும் பல்கலைக்கழகத்தில் கொடுக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story