புதிய திட்டத்திற்கு அனுமதி கேட்டு யெஸ் மியூச்சுவல் பண்டு விண்ணப்பம்


புதிய திட்டத்திற்கு அனுமதி கேட்டு யெஸ் மியூச்சுவல் பண்டு விண்ணப்பம்
x
தினத்தந்தி 14 March 2019 3:02 PM GMT (Updated: 14 March 2019 3:02 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

யெஸ் மியூச்சுவல் பண்டு (எம்.எப்) நிறுவனம், புதிய முதலீட்டு திட்டம் ஒன்றுக்கு அனுமதி கேட்டு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்து இருக்கிறது.

முதலீட்டுத் திட்டம்

யெஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் ‘யெஸ் ஓவர்நைட் பண்டு’ என்னும் புதிய முதலீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. எனவே அதற்கு அனுமதி வேண்டி செபி அமைப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறது. இது கட்டாய முதலீட்டுக் கால வரையறை இல்லாத ‘ஓப்பன் என்டட்’ திட்டமாகும். வளர்ச்சி மற்றும் டிவிடெண்டு வாய்ப்புகளுடன் கூடிய இந்த திட்டத்தில் வெளியேறும் கட்டணம் (எக்சிட் லோடு) இல்லை.

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதி முழுவதும் கடன்பத்திரங்கள் மற்றும் பணச்சந்தை உபகரணங்களில் முதலீடு செய்யப்படும். இத்திட்டத்தில் குறைந்தபட்ச விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆகும். அதன் பிறகு ரூ.1 என்ற மடங்கில் விண்ணப்பிக்க வேண்டும்.

பரஸ்பர நிதி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளன. எனவே அனுமதி கேட்டு செபி அமைப்பிடம் விண்ணப்பித்து வருகின்றன. அண்மைக் காலத்தில் சில நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

ஈடல்வைஸ் எம்.எப்.

ஈடல்வைஸ் எம்.எப். நிறுவனம் ‘ஈடல்வைஸ் ஓவர்நைட் பண்டு’ என்னும் புதிய முதலீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி செபிக்கு விண்ணப்பித்து இருக்கிறது. இதுவும் கட்டாய முதலீட்டுக் கால வரையறை இல்லாத ‘ஓப்பன் என்டட்’ திட்டமாகும். வளர்ச்சி மற்றும் டிவிடெண்டு வாய்ப்புகளுடன் கூடிய இந்தத் திட்டத்திலும் வெளியேறும் கட்டணம் கிடையாது.

இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதி முழுவதும் கடன்பத்திரங்கள் மற்றும் பணச்சந்தை உபகரணங்களில் முதலீடு செய்யப்படும். குறைந்தபட்ச விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000 ஆகும். அதன் பிறகு ரூ.1 என்ற மடங்கில் விண்ணப்பிக்க முடியும்.

Next Story