பிப்ரவரி மாத விற்பனை அடிப்படையில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 6 மாடல்கள் ஆல்டோ முதலிடத்திற்கு முன்னேற்றம்


பிப்ரவரி மாத விற்பனை அடிப்படையில் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 6 மாடல்கள் ஆல்டோ முதலிடத்திற்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 23 March 2019 5:12 AM GMT (Updated: 23 March 2019 5:12 AM GMT)

மாருதி ஆல்டோ முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.


இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் வருமாறு:-

பிப்ரவரி மாதத்தில் மாருதி நிறுவனம் 24,751 ஆல்டோ கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 19,941 -ஆக இருந்தது. இதன்படி டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுவிப்ட் கார்கள் விற்பனை (17,291-ல் இருந்து) 18,224 -ஆக அதிகரித்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மாருதி செடன் டிசையர் 4-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 15,915-ஆக உள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 20,941-ஆக இருந்தது. மாருதி பேலினோ கார்கள் விற்பனை 17,944-ஆக இருக்கிறது. இது நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

மாருதி வேகன் ஆர் 5-வது இடத்தில் உள்ளது. இந்தக் கார் விற்பனை (14,029-ல் இருந்து) 15,661-ஆக உயர்ந்துள்ளது. மாருதியின் விதாரா பிரெஸ்ஸா ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 7-வது இடத்தில் இருந்தது. இந்த கார்கள் விற்பனை (11,620-ல் இருந்து) 11,613-ஆக குறைந்து இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார்கள் விற்பனை 11,547-ஆக உள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அது 6-வது இடத்தில் இருந்தது. அப்போது இந்த கார்கள் விற்பனை 13,378-ஆக இருந்தது.

கிராண்டு ஐ10

ஹூண்டாய் எஸ்.யூ.வி. கிரெட்டா விற்பனை 10,206 -ஆக உயர்ந்துள்ளது. இது எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்டு ஐ10 கார்கள் விற்பனை 9,065 -ஆக குறைந்துள்ளது. இது 9-வது இடத்திற்கு சென்று இருக்கிறது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியா கோ கார்கள் விற்பனை (8,001 -ல் இருந்து) 8,286-ஆக அதிகரித்துள்ளது. டாப் 10 பட்டியலில் இந்தக் கார் 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Next Story