நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் சரக்குகள், சேவைகள் வர்த்தகத்தில் 9,332 கோடி டாலர் பற்றாக்கு


நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் சரக்குகள், சேவைகள் வர்த்தகத்தில் 9,332 கோடி டாலர் பற்றாக்கு
x

சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தில் பற்றாக்குறை 9,332 கோடி டாலராக உள்ளது.


நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (2018 ஏப்ரல்-2019 பிப்ரவரி) சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தில் பற்றாக்குறை 9,332 கோடி டாலராக உள்ளது.

பற்றாக்குறை

நம் நாட்டில் சரக்குகளைப் பொறுத்தவரை ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது. எனினும், சேவைகள் பிரிவில் பொதுவாக இறக்குமதியை காட்டிலும், ஏற்றுமதி அதிகமாக இருக்கிறது. எனவே இந்தப் பிரிவில் வர்த்தக உபரி இருந்து வருகிறது.

சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் 2015-2020 வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 90 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் சரக்குகள் இறக்குமதி 9.75 சதவீதம் அதிகரித்து 46,400 கோடி டாலராக உள்ளது. ஏற்றுமதி 29,847 கோடி டாலராக இருக்கிறது. இது 8.85 சதவீத உயர்வாகும். எனவே முதல் 11 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 16,552 கோடி டாலராக உள்ளது.

இதே காலத்தில், ஒட்டுமொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகத்தில் பற்றாக்குறை 9,332 கோடி டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 8,246 கோடி டாலராக இருந்தது.

பாரத ரிசர்வ் வங்கி 2011 ஜூன் மாதத்தில் இருந்து நம் நாடு மேற்கொள்ளும் சேவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. 2011 ஜூன் 15-ந் தேதி அன்று முதல் முறையாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேவைகள் வர்த்தகம் குறித்த தகவல் வெளியிடப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான சேவைகள் ஏற்றுமதி விவரம் சுமார் 45 தினங்களுக்குப் பின் வெளியிடப்படுகிறது.

பொறியியல் சாதனங்கள்

நவரத்தினம், ஆபரணங்கள், வேளாண் விளைபொருள்கள், பொறியியல் சாதனங்கள் ஆகியவை பொதுவாக நமது ஏற்றுமதியில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள துறைகளாகும். இந்த மூன்று துறைகளிலும் நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச காரணிகளால் ஏற்றுமதி வேகம் குறைந்துள்ளது.


Next Story