5ஜி தொழில்நுட்ப களப்பரிசோதனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்கும்- 2020-ஆம் ஆண்டுக்குள் சேவை ஆரம்பமாகும்


5ஜி தொழில்நுட்ப களப்பரிசோதனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்கும்- 2020-ஆம் ஆண்டுக்குள் சேவை ஆரம்பமாகும்
x
தினத்தந்தி 24 March 2019 6:51 AM GMT (Updated: 24 March 2019 6:51 AM GMT)

5ஜி தொழில்நுட்ப களப் பரிசோதனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்கும்

என்றும், 2020-ஆம் ஆண்டுக்குள் சேவை ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி தொழில்நுட்பம்

5ஜி என்பது செல்போன் அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். இது விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் 2019-ஆம் ஆண்டு இறுதிக்குள் தொடங்க இருக்கின்றன. இதில் மத்திய அரசு மிகத் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும். தகவல்கள் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது 4ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில், 4ஜி தொழில்நுட்ப கட்டமைப்பில் இணைய தகவல் பதிவிறக்க வேகத்தில் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாகவும், அதன் பதிவிறக்க வேகம் நொடிக்கு 20.9 மெகா பைட்டாக இருப்பதாகவும் டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது.

4ஜி தொழில்நுட்பத்தில் இணையத் தகவல் பதிவு ஏற்ற வேகத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி மாதத்தில் வோடாபோன் நிறுவனம்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாதத்தில் இந்நிறுவனத்தின் கட்டமைப்பில் பதிவேற்ற வேகம் வினாடிக்கு 6 மெகா பைட்டாக அதிகரித்து இருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி 4ஜி செல்போன் சேவையை தொடங்கியது. இந்நிறுவனத்தின் வரவு இந்திய செல்போன் துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. செல்போன் சேவையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் இந்நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

வணிகரீதியில் சேவை

நம் நாட்டில், 2020-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியிலான 5ஜி சேவை தொடங்கி விடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story