பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச ஏற்றம்


பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச ஏற்றம்
x
தினத்தந்தி 1 April 2019 6:45 AM GMT (Updated: 1 April 2019 6:45 AM GMT)

சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் 7 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது.

மும்பை

3 நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிவடைந்தது. இந்தப் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச ஏற்றம் கண்டது. அதே சமயம் எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிக சரிவை சந்தித்தது.

குறியீட்டு எண்கள்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 508.30 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 166.10 புள்ளிகள் முன்னேறியது.

அந்த நிலையில், டாப் 10 பட்டியலில் 7 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.57,403 கோடி அதிகரித்தது. அதில் பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிசபட்சமாக ரூ.20,261 கோடி உயர்ந்து ரூ.2.86 லட்சம் கோடியாக அதிகரித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.13,298 கோடி அதிகரித்து ரூ.8.64 லட்சம் கோடியை எட்டியது. எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.12,209 கோடி உயர்ந்து ரூ.6.31 லட்சம் கோடியாக அதிகரித்தது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.6,341 கோடி அதிகரித்து ரூ.3.70 லட்சம் கோடியாக உயர்ந்தது.

ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.4,884 கோடி உயர்ந்து ரூ.2.57 லட்சம் கோடியை எட்டியது. கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.324 கோடி அதிகரித்து ரூ.2.55 லட்சம் கோடியாக இருந்தது. இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.87 கோடி உயர்ந்து ரூ.3.24 லட்சம் கோடியை எட்டியது.

எச்.டீ.எப்.சி.

கடந்த வாரத்தில், டாப் 10 பட்டியலில் 3 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்தது. அதில் எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.2,545 கோடி சரிவடைந்து ரூ.3.39 லட்சம் கோடியாக குறைந்தது. அடுத்து டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.1,594 கோடி குறைந்து ரூ.7.51 லட்சம் கோடியாக இருந்தது. ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.876 கோடி சரிந்து ரூ.3.64 லட்சம் கோடியாக குறைந்தது.


Next Story