இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை, விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதா?

இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதாக குறை கூறப்படுகிறது. ஆனால் விண்வெலியில் அதிக குப்பைகளை கொட்டியது யார் என்பது குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.
கடந்த புதன்கிழமை நடந்த சோதனை மூலம் ஆபத்து ஏற்படுத்தும் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா தற்போது இடம் பிடித்துவிட்டது. புவி வட்டப்பாதையில் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டு இருக்கும் செயற்கைகோளை குறிபார்த்து சுட்டு வீழ்த்துவது என்பது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த ஒரு தோட்டாவை 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மற்றொரு தோட்டாவால் சுட்டு நாசமாக்கும் திறனுக்குச் சமம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா மட்டுமே தற்போது இத்தகைய வல்லமையைப் பெற்றுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா செயற்கைக் கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பெற்றுள்ள நான்காவது நாடாகியுள்ளது.
20-22 கி.மீ. உயரம் வரையில் உள்ள புவிமண்டலத்துக்கு உட்பட்ட தூரத்திலோ, புவி மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளையோ இந்த ஏவுகணையால் தாக்க முடியும்.
இந்த தகவலை பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
ஆனால் இந்த செயற்கை ஏவுகணை சோதனை மூலம் விண்வெளியில் உருவாகும் குப்பைகள் மற்ற செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறப்பட்டது.
இந்தியாவின் மிஷன் சக்தி சோதனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது,
செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம். விண்வெளி பாதுகாப்பு, ஆராய்ச்சியில் இந்தியாவுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடரும்.
அதேசமயம், செயற்கைகோள்களால் விண்வெளியில் ஏற்படும் குப்பைகள் கவலை அளிப்பதாக உள்ளது. விண்வெளி குப்பைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சோதனை வடிவமைக்கப்பட்டதாக கூறிய இந்தியாவின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளோம் என கூறினார்.

தொலைக்காட்சி, இன்டர்நெட் மற்றும் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் பல்வேறு வகையான செயற்கைக் கோள்களும், இதர விண்வெளி ஆய்வுக் கருவிகளும் விண்வெளிக்கு ஏவப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் ராணுவம், வணிகத்துறை, வங்கிகள் உள்பட அனைத்துப் பணிகளும் செயற்கைகோள்கள் மூலமே இப்போது இயங்குகின்றன.
ரஷ்யாவால் 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக்கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டதன் மூலம் ஆரம்பமானதுதான் விண்வெளி யுகம். செயற்கைக்கோள்களில் பல செயலிழந்து போனபின்னர் அவை விண்வெளியிலேயே குப்பைகளாக மிதக்கத் தொடங்கி விடுகின்றன. அவற்றைத்தான் விண்வெளிக்குப்பை என்று சொல்கிறார்கள்.
* 1957 ஆம் ஆண்டில் இருந்து 5450 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளன (தோல்விகள் தவிர்த்து)
* பூமியின் சுற்றுப்பாதையில் ராக்கெட்டுகள் வைத்துள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை 8950 இவற்றில் 5000 செயற்கைகோள்கள் இன்றும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ளன. இதில் 1950 செயற்கைகோள்கள் செயல்பாட்டில் உள்ளன.
* 22300 பொருட்கள் விண்வெளி கண்காணிப்பு நெட்வொர்க்குகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவற்றின் அட்டவணையில் பராமரிக்கப்படுகிறது.

விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும், மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், செயற்கைக்கோள் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளிக் குப்பைகள், இயற்கை விண்வெளிக் குப்பைகளைவிட அதிகரித்தபடி உள்ளது.
செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் விண்வெளிக் குப்பைகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. உதாரணமாக, செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள் மீது விண்வெளிக் குப்பை மோதி விபத்தை ஏற்படுத்தினால் அந்த செயற்கைக்கோள் பயனில்லாமல்போவது மட்டுமல்லாமல், விண்வெளிக் குப்பைகள் இதனால் மேலும் அதிகரிக்கிறது. இதனால் அந்த செயற்கைக்கோளை ஏவிய நாடு பொருளாதார, தொழில்நுட்பரீதியில் பின்னடைவைச் சந்திக்கும்.
மணிக்கு ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை சுற்றி வரும் பயனற்றுப் போன விண்கலத்தின் சிறிய பாகங்கள் கூட, பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை. விண்வெளிக் குப்பைகளுடன் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம், அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

விண்வெளி குப்பைகள், விண்வெளி பொருட்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகள் குறித்து அமைதிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணைக்குழு 2019 பிப்ரவரி மாதம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1957 முதல் விண்வெளிக்கு ஆயிரக்கணக்கான செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி விண்வெளியில் 8400 டன் குப்பைகள் இருக்கலாம். இதில் 20,000 பட்டியலிடப்பட்ட பொருட்கள் உள்ளன. இதில் சுமார் 1,700 செயல்படும் செயற்கைக்கோள்கள். பிற குப்பைகள் 92 சதவீதமாகும். இந்த குப்பைகள் பெரும்பாலும் பூமியின் சுற்றுவட்டபாதையில் காணப்படுகின்றன, 600 முதல் 1,200 கி.மீ., மற்றும் ஜியோஸ்டேஷனரி சுற்றுப்பாதையில் 35,800 கிமீட்டர் தூரத்தில் உள்ளன.
விண்வெளியில் உள்ள பொருட்களில் 8 சதவீதம் செயல்படும் செயற்கை கோள்கள், செயல்படாத செயற்கைகோள்கள் 17 சதவீதமும், மேல் நிலைகளில் 23 சதவீதமும், துண்டுகளாக 52 சதவீதமும் உள்ளன என கூறபட்டு உள்ளது.
விண்வெளி குப்பைகளும் அதற்கு காரணமான முதல் 10 நாடுகளும்
மார்ச் 28, 2018 அன்று வரையிலான தகவல்களின் அடிப்படையில், விண்வெளி மற்றும் அவற்றில் உள்ள பெரும்பாலான பொருள்களுக்கு மூல காரணமாக விளங்கும் முதல் 10 நாடுகளில் முதல் இடத்தில் 6590 பொருட்களுடன் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. இதில் 5071 கட்டுப்படுத்தப்படாத பொருட்கள். 2 -வது இடத்தில் 6401 பொருட்களுடன் அமெரிக்கா. இதில் 4684 கட்டுப்படுத்தப்படாத பொருட்கள் ஆகும்.
அதேபோல் விண்வெளியில் இருந்து அதிகம் விழுந்த பொருட்கள் பட்டியலிலும் ராஷ்யாதான் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து அமெரிக்கா உள்ளது.
விண்வெளி குப்பைகளை அழிக்கும் திட்டங்கள்
இம்மாதிரியான எதிர்கால விண்வெளி ஆபத்துகளை தவிர்க்க, சிக்கல்களை சரி செய்ய, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விண்வெளி குப்பைகளை சூடாக்கி அதன்மூலம் அவற்றை முற்றிலுமாக அழித்துவிடும் மிகப்பெரிய விண்வெளி லேசர் (gigantic space laser) ஒன்றை உருவாக்கி வருவதாக ஒரு செய்தி வெளியானது.
கேட்பதற்கு, ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கற்பனைத் தொழில்நுட்பக் கருவிபோலத் தோன்றும் இந்த விண்வெளி லேசர் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காசஸ்மோஸ் (Roscosmos)-ன் ஒரு அங்கமான ப்ரிசிஷன் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம்ஸ் (Precision Instrument Systems, PIS)-ன் விஞ்ஞானிகள் விண்வெளி லேசரை மிக வேகமாக உருவாக்கி வருகின்றனர்.
ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் தவிர்த்து, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளும் விண்வெளி லேசர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் செய்திகள் வெளியானது .
விண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது. இந்த கருவிக்கு,''ரிமூவ்-டேப்ரீஸ்'' (Remove DEBRIS) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை இது மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த கருவி வெற்றிகரமாக, விண்வெளியில் பெரிய சாட்டிலைட் மின்னணு கழிவு ஒன்றை நீக்கியது. நாசாவின் செயலிழந்த அந்த சாட்டிலைட்டை, இந்த கருவி வெற்றிகரமாக கைப்பற்றியது. வலையை மேலே வீசி, இறுகப் பற்றிய பின்னர், இந்த ''சாட்டிலைட் குப்பை'' ஸ்பேஸ் ஷிப்பிற்கு கொண்டு வரப்பட்டது. அந்தக் காட்சியின் வீடியோ வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதல் முறையாக விண்வெளி குப்பைகளை அகற்ற ''ரிமூவ்டேப்ரீஸ்'' (RemoveDEBRIS) செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை 6,500 குப்பைகளை விண்வெளியில் உருவாக்கியிருக்கலாம் என கூறுகிறது ஒரு பகுப்பாய்வு நிறுவனம். அனலிட்டிக் கிராபிக்ஸ் இன்க் (AGI) என்று அழைக்கப்படும் ஒரு மென்பொருள் பொறியியல் நிறுவனம் செயற்கைக்கோள்-எதிர்ப்பு சோதனை உருவாக்கிய சிதைவுகள் குறித்து உருவாக்கியுள்ளது. அது குறித்த வீடியோவையும் வெளியிட்டு உள்ளது.
அந்த நிறுவனம் சோதனை முடிவுகளால் ஏற்படும் குப்பையிலுள்ள துகள்களின் தோராயத்தை விளக்குகிறது.
பகுப்பாய்வு கிராஃபிக்ஸ் இன்க் பொறியியல் நிறுவன துணை தலைவர் டாம் ஜான்சன் கூறும்போது, அரை சென்டிமீட்டர் அளவிளான 6500 துண்டுகளை மாதிரியாக உருவாக்கி இருக்கலாம் என கூறி உள்ளார்.
இந்தியாவின் இந்த சோதனையால் விண்வெளியில் குப்பை சேராது, தாழ்வான வளிமண்டலத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதால், விண்வெளியில் குப்பைகள் சேராது என்றும், உடைந்து சிதறிய செயற்கைக்கோள் குப்பைகள் சில வாரங்களில் பூமியில் வந்து விழும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

விண்வெளி குப்பை என்றால் என்ன?
புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள வெற்றிடம், விண்வெளி என அழைக்கப்படுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 முதல் 2,000 கி.மீ. தொலைவில் பல்வேறு நாடுகள் அனுப்பி வைத்துள்ள செயற்கைக் கோள்கள் இயங்குகின்றன.

தொலைக்காட்சி, இன்டர்நெட் மற்றும் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. அவை தொடர்ந்து இயங்க வேண்டுமானால் பல்வேறு வகையான செயற்கைக் கோள்களும், இதர விண்வெளி ஆய்வுக் கருவிகளும் விண்வெளிக்கு ஏவப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டின் ராணுவம், வணிகத்துறை, வங்கிகள் உள்பட அனைத்துப் பணிகளும் செயற்கைகோள்கள் மூலமே இப்போது இயங்குகின்றன.
ரஷ்யாவால் 1957 அக்டோபர் 4-ல் ஸ்புட்னிக்-1 என்னும் செயற்கைக்கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டதன் மூலம் ஆரம்பமானதுதான் விண்வெளி யுகம். செயற்கைக்கோள்களில் பல செயலிழந்து போனபின்னர் அவை விண்வெளியிலேயே குப்பைகளாக மிதக்கத் தொடங்கி விடுகின்றன. அவற்றைத்தான் விண்வெளிக்குப்பை என்று சொல்கிறார்கள்.
* 1957 ஆம் ஆண்டில் இருந்து 5450 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளன (தோல்விகள் தவிர்த்து)
* பூமியின் சுற்றுப்பாதையில் ராக்கெட்டுகள் வைத்துள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை 8950 இவற்றில் 5000 செயற்கைகோள்கள் இன்றும் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ளன. இதில் 1950 செயற்கைகோள்கள் செயல்பாட்டில் உள்ளன.
* 22300 பொருட்கள் விண்வெளி கண்காணிப்பு நெட்வொர்க்குகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவற்றின் அட்டவணையில் பராமரிக்கப்படுகிறது.

விண் வெளி குப்பைகளால் எற்படும் ஆபத்து என்ன?
மிகவும் பெரிய அளவுகொண்ட சுமார் 20,000 குப்பைகள் தற்போது விண்வெளியில் பூமியைச் சுற்றி வருவதாகக் கணித்துள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்று.
விண்வெளிக் குப்பைகள் அனைத்தும், புவியீர்ப்புத்தன்மை காரணமாக பூமிக்கு வந்துவிடும். ஆனால், சில குப்பைகள் அல்லது துண்டுகள், பூமியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த உயரத்தில் இருந்து பூமிக்கு வர ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அவ்வளவு காலம் நம்மிடம் இல்லை. விண்வெளிக் குப்பைகளால் பெரும் பிரச்சினை ஏற்படுவதற்கு இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள்தான் ஆகும் என '' என்று விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளிக் குப்பைகளை அகற்றும் அணியைச் சேர்ந்த ஜேசன் ஃபோர்ஷா கூறி உள்ளார்.
விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய செயற்கைக்கோள் குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, செவ்வாய் கிரகம், நிலவு உள்ளிட்ட மனிதனின் அடுத்த புகலிடங்களாக மாறக்கூடிய கிரகங்களைத் தேடிச் செல்லும் விண்வெளி கப்பல்கள் உள்ளிட்டவை அவற்றின் இலக்கை அடைய விண்வெளி குப்பைகள் பெரும் தடையாகவும் மாறக்கூடும் என்று அஞ்சப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மிகவும் பெரிய அளவுகொண்ட சுமார் 20,000 குப்பைகள் தற்போது விண்வெளியில் பூமியைச் சுற்றி வருவதாகக் கணித்துள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு ஒன்று.
விண்வெளிக் குப்பைகள் அனைத்தும், புவியீர்ப்புத்தன்மை காரணமாக பூமிக்கு வந்துவிடும். ஆனால், சில குப்பைகள் அல்லது துண்டுகள், பூமியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளன. அந்த உயரத்தில் இருந்து பூமிக்கு வர ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அவ்வளவு காலம் நம்மிடம் இல்லை. விண்வெளிக் குப்பைகளால் பெரும் பிரச்சினை ஏற்படுவதற்கு இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள்தான் ஆகும் என '' என்று விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளிக் குப்பைகளை அகற்றும் அணியைச் சேர்ந்த ஜேசன் ஃபோர்ஷா கூறி உள்ளார்.
விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய செயற்கைக்கோள் குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, செவ்வாய் கிரகம், நிலவு உள்ளிட்ட மனிதனின் அடுத்த புகலிடங்களாக மாறக்கூடிய கிரகங்களைத் தேடிச் செல்லும் விண்வெளி கப்பல்கள் உள்ளிட்டவை அவற்றின் இலக்கை அடைய விண்வெளி குப்பைகள் பெரும் தடையாகவும் மாறக்கூடும் என்று அஞ்சப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விண்கற்கள், எரிநட்சத்திரத் தூசுகள் ஆகியவை இயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும், மனிதர்களால் விண்ணுக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த, வாழ்நாள் முடிந்த செயற்கைக் கோள், செயற்கைக்கோள் பாகங்கள் செயற்கை விண்வெளிக் குப்பைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் செயற்கைக் கோள்களின் தேவை அதிகமானதால் செயற்கை விண்வெளிக் குப்பைகள், இயற்கை விண்வெளிக் குப்பைகளைவிட அதிகரித்தபடி உள்ளது.
செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும் விண்வெளிக் குப்பைகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. உதாரணமாக, செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள் மீது விண்வெளிக் குப்பை மோதி விபத்தை ஏற்படுத்தினால் அந்த செயற்கைக்கோள் பயனில்லாமல்போவது மட்டுமல்லாமல், விண்வெளிக் குப்பைகள் இதனால் மேலும் அதிகரிக்கிறது. இதனால் அந்த செயற்கைக்கோளை ஏவிய நாடு பொருளாதார, தொழில்நுட்பரீதியில் பின்னடைவைச் சந்திக்கும்.
மணிக்கு ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை சுற்றி வரும் பயனற்றுப் போன விண்கலத்தின் சிறிய பாகங்கள் கூட, பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை. விண்வெளிக் குப்பைகளுடன் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, சர்வதேச விண்வெளி நிலையம், அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
விண்வெளி குப்பைகள் எவ்வளவு உள்ளது, அதன் அளவுகள் என்ன ?
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில் 2018 ஜனவரி மாதம்வரை விண்வெளியில் 1 மீட்டர் அளவிலான பொருட்டகள் 5 ஆயிரமும், 10 செமீக்கு அதிகமான பொருட்கள் 20 ஆயிரமும், 10 செ.மீ அளவில் 34 ஆயிரம் பொருட்களும், 9 லட்சம் 1 செமீ முதல் 10 செமீ வரையிலான பொருட்களும், 166 மில்லியன் 1மிமீட்டர் முதல் 1 செமீ அளவிலான வரையிலான குப்பைகள் இருக்கின்றன. இவைகள் மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 250 க்கும் மேற்பட மோதல்கள் மட்டும் வெடிப்புகளும் ஏற்படுகின்றன. மூன்றில் 2 பங்கு பொருட்கள் பூமியின் சுற்றுபாதைக்கு 2 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது என கூறி உள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில் 2018 ஜனவரி மாதம்வரை விண்வெளியில் 1 மீட்டர் அளவிலான பொருட்டகள் 5 ஆயிரமும், 10 செமீக்கு அதிகமான பொருட்கள் 20 ஆயிரமும், 10 செ.மீ அளவில் 34 ஆயிரம் பொருட்களும், 9 லட்சம் 1 செமீ முதல் 10 செமீ வரையிலான பொருட்களும், 166 மில்லியன் 1மிமீட்டர் முதல் 1 செமீ அளவிலான வரையிலான குப்பைகள் இருக்கின்றன. இவைகள் மணிக்கு 28 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 250 க்கும் மேற்பட மோதல்கள் மட்டும் வெடிப்புகளும் ஏற்படுகின்றன. மூன்றில் 2 பங்கு பொருட்கள் பூமியின் சுற்றுபாதைக்கு 2 ஆயிரம் கி.மீட்டர் தூரத்தில் உள்ளது என கூறி உள்ளது.

விண்வெளி குப்பைகள், விண்வெளி பொருட்களின் பாதுகாப்பு பற்றிய ஆய்வுகள் குறித்து அமைதிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணைக்குழு 2019 பிப்ரவரி மாதம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1957 முதல் விண்வெளிக்கு ஆயிரக்கணக்கான செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி விண்வெளியில் 8400 டன் குப்பைகள் இருக்கலாம். இதில் 20,000 பட்டியலிடப்பட்ட பொருட்கள் உள்ளன. இதில் சுமார் 1,700 செயல்படும் செயற்கைக்கோள்கள். பிற குப்பைகள் 92 சதவீதமாகும். இந்த குப்பைகள் பெரும்பாலும் பூமியின் சுற்றுவட்டபாதையில் காணப்படுகின்றன, 600 முதல் 1,200 கி.மீ., மற்றும் ஜியோஸ்டேஷனரி சுற்றுப்பாதையில் 35,800 கிமீட்டர் தூரத்தில் உள்ளன.
விண்வெளியில் உள்ள பொருட்களில் 8 சதவீதம் செயல்படும் செயற்கை கோள்கள், செயல்படாத செயற்கைகோள்கள் 17 சதவீதமும், மேல் நிலைகளில் 23 சதவீதமும், துண்டுகளாக 52 சதவீதமும் உள்ளன என கூறபட்டு உள்ளது.
விண்வெளி குப்பைகளும் அதற்கு காரணமான முதல் 10 நாடுகளும்
மார்ச் 28, 2018 அன்று வரையிலான தகவல்களின் அடிப்படையில், விண்வெளி மற்றும் அவற்றில் உள்ள பெரும்பாலான பொருள்களுக்கு மூல காரணமாக விளங்கும் முதல் 10 நாடுகளில் முதல் இடத்தில் 6590 பொருட்களுடன் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. இதில் 5071 கட்டுப்படுத்தப்படாத பொருட்கள். 2 -வது இடத்தில் 6401 பொருட்களுடன் அமெரிக்கா. இதில் 4684 கட்டுப்படுத்தப்படாத பொருட்கள் ஆகும்.
அதேபோல் விண்வெளியில் இருந்து அதிகம் விழுந்த பொருட்கள் பட்டியலிலும் ராஷ்யாதான் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து அமெரிக்கா உள்ளது.
நாடுகள்- விண்கலங்கள் - ராக்கெட் பாகங்கள் (2018 அக்டோபர், வரைபட்டியலிடப்பட்டுள்ளது அமெரிக்க ஸ்பேஸ்சர்கில்லீன்ஸ்நெட்வர்க்) | |||
நாடுகள் | விண்கலங்கள் | ராக்கெட் பாகங்கள் & குப்பைகள் | மொத்தம் |
சீனா | 322 | 3665 | 3987 |
சிஐஎஸ் நாடுகள் | 1519 | 5071 | 6590 |
ஐரோப்பிய விண்வெளி மையம் | 87 | 57 | 144 |
பிரான்ஸ் | 64 | 491 | 555 |
இந்தியா | 89 | 117 | 206 |
ஜப்பான் | 173 | 108 | 281 |
அமெரிக்கா | 1667 | 4734 | 6401 |
மற்றவை | 895 | 114 | 1009 |
மொத்தம் | 4816 | 14357 | 19173 |
விண்வெளி குப்பைகளை அழிக்கும் திட்டங்கள்
இம்மாதிரியான எதிர்கால விண்வெளி ஆபத்துகளை தவிர்க்க, சிக்கல்களை சரி செய்ய, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விண்வெளி குப்பைகளை சூடாக்கி அதன்மூலம் அவற்றை முற்றிலுமாக அழித்துவிடும் மிகப்பெரிய விண்வெளி லேசர் (gigantic space laser) ஒன்றை உருவாக்கி வருவதாக ஒரு செய்தி வெளியானது.
கேட்பதற்கு, ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கற்பனைத் தொழில்நுட்பக் கருவிபோலத் தோன்றும் இந்த விண்வெளி லேசர் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காசஸ்மோஸ் (Roscosmos)-ன் ஒரு அங்கமான ப்ரிசிஷன் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம்ஸ் (Precision Instrument Systems, PIS)-ன் விஞ்ஞானிகள் விண்வெளி லேசரை மிக வேகமாக உருவாக்கி வருகின்றனர்.
ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ் தவிர்த்து, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளும் விண்வெளி லேசர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் செய்திகள் வெளியானது .
விண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது. இந்த கருவிக்கு,''ரிமூவ்-டேப்ரீஸ்'' (Remove DEBRIS) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டது. தற்போது வரை இது மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த கருவி வெற்றிகரமாக, விண்வெளியில் பெரிய சாட்டிலைட் மின்னணு கழிவு ஒன்றை நீக்கியது. நாசாவின் செயலிழந்த அந்த சாட்டிலைட்டை, இந்த கருவி வெற்றிகரமாக கைப்பற்றியது. வலையை மேலே வீசி, இறுகப் பற்றிய பின்னர், இந்த ''சாட்டிலைட் குப்பை'' ஸ்பேஸ் ஷிப்பிற்கு கொண்டு வரப்பட்டது. அந்தக் காட்சியின் வீடியோ வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதல் முறையாக விண்வெளி குப்பைகளை அகற்ற ''ரிமூவ்டேப்ரீஸ்'' (RemoveDEBRIS) செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் அனுப்பப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story