மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் குறியீட்டு எண் அதிகபட்ச வீழ்ச்சி


மும்பை பங்குச்சந்தையில் ரியல் எஸ்டேட் குறியீட்டு எண் அதிகபட்ச வீழ்ச்சி
x
தினத்தந்தி 2 April 2019 6:17 AM GMT (Updated: 2 April 2019 6:17 AM GMT)

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

மும்பை

துறைக்கான குறியீட்டு எண் அதிகபட்சமாக 0.76 சதவீதம் வீழ்ந்தது. வர்த்தகத்தின் இறுதியில் அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-

* பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனப் பங்கின் விலை 4.21 சதவீதம் சரிவடைந்து ரூ.71.90-ல் நிலைபெற்றது.

* டீ.எல்.எப். நிறுவனப் பங்கு 3.08 சதவீதம் குறைந்து ரூ.325.65-க்கு விலைபோனது.

* சோபா நிறுவனப் பங்கின் விலை 0.58 சதவீதம் சரிந்து ரூ.203.80-ஆக இருந்தது.

* பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனப் பங்கு விலை 0.55 சதவீதம் இறங்கி ரூ.704.75-க்கு கைமாறியது.

* கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனப் பங்கின் விலை 0.13 சதவீதம் வீழ்ந்து ரூ.430.75-ல் நிலைகொண்டது.

அந்த நிலையில் ஏற்றம் கண்ட பங்குகள் வருமாறு:-

* மகிந்திரா லைப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் நிறுவனப் பங்கு 2.30 சதவீதம் அதிகரித்து ரூ.367.60-க்கு கைமாறியது.

* ஓமேக்ஸ் நிறுவனப் பங்கு விலை 2.18 சதவீதம் உயர்ந்து ரூ.210.85-ஆக இருந்தது.

* சன்டெக் நிறுவனப் பங்கின் விலை 2.08 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.470.25-ல் முடிவுற்றது.

* இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்கு 2.01 சதவீதம் முன்னேறி ரூ.94.05-க்கு விலைபோனது.

* ஓபராய் ரியாலிட்டி நிறுவனப் பங்கின் விலை 0.60 சதவீதம் அதிகரித்து ரூ.530.45-ஆக இருந்தது.

Next Story