2018-19-ஆம் நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7% அதிகரிப்பு


2018-19-ஆம் நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7% அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 April 2019 10:46 AM IST (Updated: 3 April 2019 10:46 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 60.7 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது.

2018-19-ஆம் நிதி ஆண்டில், கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 60.7 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது.

இந்தியா 3-வது இடம்

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. அதே சமயம் உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.

2016-17-ஆம் நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் 55.40 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனம் 60 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. ஆனால் 56.70 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்தது. எனினும் முந்தைய ஆண்டை விட உற்பத்தி 2.35 சதவீதம் அதிகரித்து இருந்தது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி மற்றும் விற்பனை இலக்கு தலா 61 கோடி டன்னாக இருந்தது. எனினும் 60.7 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்து இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் உயர்வாகும்.

100 கோடி டன்

2025-26-ஆம் ஆண்டிற்குள் தனது நிலக்கரி உற்பத்தியை 100 கோடி டன்னாக அதிகரிக்க கோல் இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 More update

Next Story