டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்

சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
மும்பை
சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-
* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 0.15 சதவீதம் உயர்ந்து ரூ.1,355.10-ல் நிலைகொண்டது.
* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்கின் விலை 1.84 சதவீதம் அதிகரித்து ரூ.2,051.45-ஆக இருக்கிறது.
* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கு விலை 0.76 சதவீதம் உயர்ந்து ரூ.2,301.75-ஆக இருந்தது.
* ஐ.டி.சி. நிறுவனப் பங்கு 0.05 சதவீதம் முன்னேறி ரூ.294.65-க்கு விலைபோனது.
* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கின் விலை 0.50 சதவீதம் சரிவடைந்து ரூ.1,659.70-ல் நிலைபெற்றது.
* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கு விலை 0.74 சதவீதம் உயர்ந்து ரூ.2,056.45-ஆக இருந்தது.
* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 1.07 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.756.25-க்கு கைமாறியது.
* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 1.46 சதவீதம் குறைந்து ரூ.317-ஆக இருந்தது.
* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு 0.82 சதவீதம் உயர்ந்து ரூ.1,334.85-க்கு விலைபோனது.
* ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 0.51 சதவீதம் முன்னேறி ரூ.390.50-க்கு கைமாறியது.
Related Tags :
Next Story






