சென்செக்ஸ் 239 புள்ளிகள் உயர்வு நிப்டி 67 புள்ளிகள் முன்னேற்றம்


சென்செக்ஸ் 239 புள்ளிகள் உயர்வு நிப்டி 67 புள்ளிகள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 10 April 2019 10:00 AM IST (Updated: 10 April 2019 10:00 AM IST)
t-max-icont-min-icon

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 239 புள்ளிகள் உயர்வு நிப்டி 67 புள்ளிகள் முன்னேற்றம்

மும்பை

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் பங்கு வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 67 புள்ளிகள் முன்னேறியது.

ரூபாய் மதிப்பு

அன்னிய செலாவணி சந்தையில் நேற்று டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு நேற்று ஒரு கட்டத்தில் 25 காசுகள் அதிகரித்து 69.41-ஆக உயர்ந்தது.

அத்துடன் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது, ஐரோப்பிய நாடுகளில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது போன்றவை இந்திய பங்கு வியாபாரத்திற்கு ஊக்கம் அளித்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தும் இங்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அந்த நிலையில் மும்பை சந்தையில் பல்வேறு குறியீட்டு எண்களும் உயர்ந்தன. அதில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 1.40 சதவீதம் அதிகரித்தது. அடுத்து மோட்டார் வாகனத் துறை குறியீட்டு எண் 1.21 சதவீதம் உயர்ந்தது. வங்கி துறை குறியீட்டு எண் 1.09 சதவீதம் முன்னேறியது. உலோகத் துறை குறியீட்டு எண் 0.97 சதவீதம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. 5 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது. இந்தப் பட்டியலில் யெஸ் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், வேதாந்தா, சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி, ஐ.டி.சி., ஆக்சிஸ் வங்கி உள்பட 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. அதே சமயம் ஏஷியன் பெயிண்ட், இன்போசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி. ஆகிய 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 238.69 புள்ளிகள் அதிகரித்து 38,939.22 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 38,978.99 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 38,598.72 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,170 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,376 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 153 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,354 கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அது ரூ.2,247 கோடியாக இருந்தது.

நிப்டி

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 67.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,671.95 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 11,683.90 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 11,569.70 புள்ளிகளுக்கும் சென்றது.

1 More update

Next Story