இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரி


இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய ஏரி
x
தினத்தந்தி 13 April 2019 8:10 AM GMT (Updated: 13 April 2019 8:10 AM GMT)

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ஏரி ஒன்று இயற்கையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியுள்ளது.

கண்ணைக் கவரும் நிறம், அதிகப்படியான சூரிய ஒளி, குறைந்த மழைப் பொழிவு மற்றும் மிதமான வெப்பநிலையால் உருவாகிறது. இம்மாதிரியான சூழலில் இந்த ஏரியில் உள்ள பாசிகள் சிவப்பு நிற நிறமிகளை உண்டாக்குகின்றன.

பெயிண்டை கொட்டிவிட்டது போல வண்ணமயமாய் ஜொலிக்கும் இந்த ஏரிக்கு கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

சில சுற்றுலா பயணிகள் இந்த ஏரியின் வண்ணத்துக்கு ஏற்றாற்போல் உடை யணிந்து புகைப்படங்களும் எடுத்துக் கொள்கின்றனர்

ஆனால், இந்த ஏரியில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதாகவும், அது சிலரின் தோலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் ஏரிக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஏரிக்கு அருகில் அழுகிய முட்டையின் துர்நாற்றம் வீசுவதாக சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக இந்த இளஞ்சிவப்பு நிறம் இலையுதிர்க் காலத்தின் இறுதி வரை நீடிக்கும். குளிர்ச்சியான வெப்பநிலை வந்த பிறகு ஏரி மீண்டும் நீல நிறத்துக்குத் திரும்பும்.

இதைப் போன்ற ‘இளஞ்சிவப்பு ஏரிகள்’ ஆஸ்திரேலியா மட்டுமின்றி, ஸ்பெயின், கனடா, செனகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன.


Next Story