டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு


டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு
x
தினத்தந்தி 15 April 2019 6:50 AM GMT (Updated: 15 April 2019 6:50 AM GMT)

சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவு

சென்ற வாரத்தில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்தது. 4 நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகரித்தது. இந்தப் பட்டியலில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்ச சரிவை சந்தித்தது. அதே சமயம் ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிக ஏற்றம் கண்டது.

குறியீட்டு எண்கள்

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நிகர அடிப்படையில் 95.12 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 22.50 புள்ளிகள் இறங்கியது.

அந்த நிலையில், டாப் 10 பட்டியலில் 6 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ஒட்டுமொத்த அளவில் ரூ.42,827 கோடி குறைந்தது. அதில் டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.14,147 கோடி குறைந்து ரூ.7.56 லட்சம் கோடியாக சரிவடைந்தது. அடுத்து எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.9,967 கோடி சரிவடைந்து ரூ.6.17 லட்சம் கோடியாக குறைந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.8,328 கோடி குறைந்து ரூ.8.51 லட்சம் கோடியாக இருந்தது. எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.5,199 கோடி சரிந்து ரூ.3.49 லட்சம் கோடியாக குறைந்தது. இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.3,670 கோடி குறைந்து ரூ.3.27 லட்சம் கோடியாக இருந்தது. பாரத ஸ்டேட் வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.1,517 கோடி சரிந்து ரூ.2.81 லட்சம் கோடியாக குறைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

கடந்த வாரத்தில், டாப் 10 பட்டியலில் 4 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகரித்தது. அதில் ஐ.டி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு அதிகபட்சமாக ரூ.13,423 கோடி அதிகரித்து ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.13,237 கோடி உயர்ந்து ரூ.3.73 லட்சம் கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.2,550 கோடி அதிகரித்து ரூ.2.54 லட்சம் கோடியை எட்டியது. கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்குகளின் மதிப்பு ரூ.2,039 கோடி உயர்ந்து ரூ.2.57 லட்சம் கோடியாக அதிகரித்தது.


Next Story