வாகன டயர்களுக்கான தேவை 7-9 சதவீதம் அதிகரிக்கும் இக்ரா நிறுவனம் மதிப்பீடு


வாகன டயர்களுக்கான தேவை 7-9 சதவீதம் அதிகரிக்கும் இக்ரா நிறுவனம் மதிப்பீடு
x
தினத்தந்தி 15 April 2019 7:39 AM GMT (Updated: 15 April 2019 7:39 AM GMT)

2018-19 முதல் 2022-23-ஆம் ஆண்டு வரை வாகன டயர்களுக்கான தேவை 7-9 சதவீதம் அதிகரிக்கும் இக்ரா நிறுவனம் மதிப்பீடு

மும்பை

2018-19 முதல் 2022-23-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் வாகன டயர்களுக்கான தேவை 7 -9 சதவீதம் அதிகரிக்கும் என இக்ரா நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

மோட்டார் வாகனங்கள்

நம்நாட்டில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி வேகம் காரணமாக சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் விறுவிறுப்பு அடைந்துள்ளதால் வர்த்தக வாகனங்கள் விற்பனையும் அமோகமாக இருந்து வருகிறது.

மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு துறையின் வளர்ச்சியில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை சந்தைகளின் தேவை காரணமாக டயர் உற்பத்தியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நம் நாட்டில் எம்.ஆர்.எப்., டி.வி.எஸ். ஸ்ரீசக்ரா, சியெட், அப்பல்லோ டயர்ஸ், ஜே.கே. டயர் உள்ளிட்ட நிறுவனங்கள் இத்துறையில் முத்திரை பதித்து வருகின்றன.

இந்நிலையில், கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா, 2018-19 முதல் 2022-23-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் வாகன டயர்களுக்கான தேவைப்பாடு 7 முதல் 9 சதவீதம் வரை அதிகரிக்கும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. இதில் முதல் மூன்று ஆண்டுகளில் டயர் ஆலைகளில் விரிவாக்க முதலீடுகளும் அதிகமாக இருக்கும் என இந்நிறுவனம் கணித்துள்ளது. டயர்களுக்கான தேவைப்பாடு நிலையாக உயரும் என்பதால் இத்துறை நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி வலுவடைந்து முதலீடுகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே இதன் பின்னணியாகும்.

இயற்கை ரப்பர்

சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இருந்தாலும் உள்நாட்டில் தேவை அதிகமாக உள்ளதால் ரப்பர் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. நம் நாட்டில் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் ரப்பரை இறக்குமதி செய்கின்றன. பொதுவாக மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.


Next Story