சிறப்புக் கட்டுரைகள்

மகாராஜாவை போல் பயணம் செய்ய மகாராஜா எக்ஸ்பிரஸ் + "||" + Maharaja Express

மகாராஜாவை போல் பயணம் செய்ய மகாராஜா எக்ஸ்பிரஸ்

மகாராஜாவை போல் பயணம் செய்ய மகாராஜா எக்ஸ்பிரஸ்
தண்டவாளத்தில் நகரும் அரண்மனையைப் பார்த்து அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தால், அதற்கு ஏன் மகாராஜா எக்ஸ்பிரஸ் என பெயரிட்டார்கள் என்பதை உணரலாம்.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி.) 2010-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இத்தகைய சொகுசு ரெயில் சேவையை இயக்குகிறது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை இயக்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பகுதிகள் அதிகம் நிறைந்த ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ரெயில் சேவை அதிகம் உள்ளது.

உலகிலேயே மிகவும் சொகுசான ரெயில் பயணம் என இது அழைக்கப்படுகிறது. இந்த சொகுசு ரெயில் 23 பெட்டிகளைக் கொண்டது. ரெயிலிலேயே தங்குமிடம், உணவுக் கூடம், மதுபான அரங்கு உள்ளிட்ட அனைத்து நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் விஷயங்கள் அனைத்தும் இதில் கிடைக்கும்.

சொகுசான ரெயில் பயணத்துக்கு உதவும் வகையில் இந்த பெட்டிகள் அனைத்தும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டவை. பெட்டிகளின் ஷாக் அப்சார்பர் அதிக அளவில் இருப்பதால் அதிர்வே இருக்காது. இதில் எல்.சி.டி. டி.வி., வை-பை, உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. சுற்றுச் சூழலை பாதிக்காத கழிவறை வசதி, நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் தொலைபேசி, தனிப்பட்ட கிளைமேட் கண்ட்ரோல் வசதி, பயணிகள் தங்களது மதிப்பு மிக்க பொருட்களை வைக்க பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்டவை உள்ளது. இதில் உள்ள 14 பெட்டிகளில் 43 தனியறைகள் உள்ளன. இதில் 88 பேர் பயணிக்க முடியும்.

இந்த ரெயிலில் பயணம் செய்யும்போது மும்பை, அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்ப்பூர், ரத்தம்போர், ஆக்ரா, புதுடெல்லி ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம். 7 நாள் 8 இரவு என சுற்றுலா பயண திட்டம் வகிக்கிறது. இந்த சுற்றுலா பயண திட்டத்திற்கு ‘ஹெரிடேஜ் ஆப் இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிரெஷர் ஆப் இந்தியா (3 பகல் 4 இரவு): டெல்லி ஆக்ரா, ரன்தம்போர், ஜெய்ப்பூர், டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜெம்ஸ் ஆப் இந்தியா (3 பகல் 4 இரவு): டெல்லி ஆக்ரா, ரன்தம்போர், ஜெய்ப்பூர், டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் விதமாக இப்பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பனோரமா (9 நாள் 10 இரவு): டெல்லி ஜெய்ப்பூர், ஜோத்பூர், ரன்தம்போர், பதேபூர் சிக்ரி, குவாலியர், ஆர்ச்சா, கஜூரேகா, வாரணாசி, லக்னோ, டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஸ்பிளெண்டர் (7 இரவு 8 பகல்): டெல்லி, ஆக்ரா, ரன்தம்போர், ஜெய்ப்பூர், பிகானீர், ஜோத்பூர், உதய்பூர், பலாசினோர், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பயணம் செல்லும் வகையில் இப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் பேரி குயின், பேலஸ் ஆன் வீல்ஸ், ராயல் ஓரியண்ட், டெக்கான் ஒடிஸ்ஸி, மகாபரிநிர்வான் எக்ஸ்பிரஸ், கோல்டன் சாரியட், ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் உள்ளிட்ட சொகுசு சுற்றுலா ரெயில் சேவைகளை அறியலாம்.