சிறப்புக் கட்டுரைகள்

தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்? + "||" + Hiding the money during the election?

தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்?

தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியில் வருமானத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
 தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த சோதனைகளில் ரூ.138.57 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 16-ந் தேதி மட்டும் ரூ.3.16 கோடி பிடிபட்டது. இதில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் ரூ.1.41 கோடி சிக்கியது. வருமானத்துறையினர் மட்டும் மேற்கொண்ட சோதனையில் ரூ.56.55 கோடி சிக்கியுள்ளது. தேனியில் பிடிபட்ட பணம் இதில் இன்னும் சேர்க்கப்படவில்லை.

இதுவரை ரூ.43.54 லட்சம் மதிப்புள்ள மது ரூ.37.68 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆயிரத்து 22 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி உள்ளிட்ட மதிப்பு அதிகமுள்ள பொருட்களும் பிடிபட்டுள்ளன. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் பணபட்டுவாடாவின் போது கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாக்களிக்க பணம் கொடுப்பதும், வாங்குவதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுக்குரிய குற்றங்கள். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு வரை சிறை தண்டனைக்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சோதனையில் சிக்கும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை காட்டினால், எடுத்துச் சென்றவை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டவை திரும்பக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமானத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவார்கள். அவர்கள் பணத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்வார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.10 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் அந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராத பட்சத்தில் அந்தப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைப்பார்கள். பறக்கும் படையினரிடம் சோதனையில் சிக்கும் பணம் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அதன் விவரம் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். அந்தப்பணத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காட்டாத பட்சத்தில் அந்தப்பணம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.

- நீடாமங்கலம் கோபாலசாமி,  முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கு பின் பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சு நடத்த தயார்; இந்திய கம்யூனிஸ்டு கட்சி
தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைக்க மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.
2. 5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடி பேசினார்.
3. அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
அரவக்குறிச்சியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது என பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
4. தமிழகத்தில் மாநில சுயாட்சியின் கீழ் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி அரவக்குறிச்சியில் வைகோ பேச்சு
நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் பறிபோன உரிமைகளை மீட்டெடுக்க தமிழகத்தில் மாநில சுயாட்சியை முன்னிலைப்படுத்தி தி.மு.க. ஆட்சி அமையும் என அரவக்குறிச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசினார்.
5. தேர்தலில் யாருக்கு ஓட்டு? - இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் கருத்து
தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது என்பது குறித்து இயக்குனர்கள் பார்த்திபன், சேரன், முருகதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.