டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்


டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
x
தினத்தந்தி 22 April 2019 9:43 AM GMT (Updated: 22 April 2019 9:43 AM GMT)

சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்

மும்பை

சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 2.79 சதவீதம் அதிகரித்து ரூ.1,382.90-ல் நிலைகொண்டது.

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனப் பங்கின் விலை 0.61 சதவீதம் உயர்ந்து ரூ.2,145.50-ஆக இருக்கிறது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கு விலை 0.63 சதவீதம் சரிந்து ரூ.2,290.15-ஆக இருந்தது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கு 0.05 சதவீதம் குறைந்து ரூ.1,737.45-க்கு விலைபோனது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 0.88 சதவீதம் இறங்கி ரூ.304.35-ல் நிலைபெற்றது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கு விலை 1.16 சதவீதம் வீழ்ந்து ரூ.2,003.90-ஆக இருந்தது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 1.03 சதவீதம் சரிவடைந்து ரூ.716.40-க்கு கைமாறியது.

* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 1.55 சதவீதம் குறைந்து ரூ.310.90-ஆக இருந்தது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு 0.67 சதவீதம் இறங்கி ரூ.1,376.70-க்கு விலைபோனது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 0.47 சதவீதம் சரிந்து ரூ.404.90-க்கு கைமாறியது.


Next Story