முதல் காலாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு ரூ.17,682 கோடியாக உயர்ந்தது


முதல் காலாண்டில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு ரூ.17,682 கோடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 5 May 2019 1:54 PM IST (Updated: 5 May 2019 1:54 PM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு ரூ.17,682 கோடியாக உயர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட் ஆலோசனை சேவை நிறுவனமான குஷ்மன் அண்டு வேக்பீல்டு இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்த சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அவை வருமாறு:-

2017 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரியல் எஸ்டேட் திட்டங்களில் ரூ.16,528 கோடி முதலீடு செய்யப்பட்டு இருந்தது. நடப்பு ஆண்டின் இதே காலத்தில் முதலீடு ரூ.17,682 கோடியாக உள்ளது. ஆக, இத்துறையில் முதலீடு 7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

வணிக வளாக திட்டங்களில் அன்னிய முதலீடு அதிக அளவில் வந்ததே இதற்குக் காரணமாகும். முதல் காலாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தம் ரூ.11,338 கோடியை முதலீடு செய்துள்ளனர். சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 81 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் வீட்டு வசதித் திட்டங்களில் முதலீடு சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.8,518 கோடியை ஈர்த்து இருந்த இந்த திட்டங்கள் இப்போது ரூ.3,697 கோடியை மட்டுமே ஈர்த்துள்ளன. இதன்படி இப்பிரிவில் முதலீடு 57 சதவீதம் குறைந்துள்ளது.

கணக்கீட்டுக் காலத்தில் அலுவலக சொத்துக்களில் முதலீடு (ரூ.6,100 கோடியில் இருந்து) ரூ.7,925 கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஹோட்டல் திட்டங்களில் முதலீடு 3 மடங்கிற்கு மேல் அதிகரித்து (ரூ.1,200 கோடியில் இருந்து) ரூ.3,950 கோடியாக உயர்ந்துள்ளது.

வணிக வளாக திட்டங்கள்

வணிக வளாக திட்டங்களில் முதலீடு (ரூ.250 கோடியில் இருந்து) ரூ.1,000 கோடியாக நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பன்முக பயன்பாட்டுத் திட்டங்களில் (ரூ.110 கோடியில் இருந்து) ரூ.350 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தொழிற்பிரிவுகளில் (சேமிப்புக் கிடங்குகள் போன்றவை) ரூ.760 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தப் பிரிவில் ரூ.350 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு குஷ்மன் அண்டு வேக்பீல்டு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

1 More update

Next Story