சிறப்புக் கட்டுரைகள்

இயற்கை ரப்பர் உற்பத்தி 7.5% குறைந்தது ரப்பர் வாரியம் தகவல் + "||" + Natural rubber output in the financial year 2018-19 was reduced by 7.5% rubber board information

இயற்கை ரப்பர் உற்பத்தி 7.5% குறைந்தது ரப்பர் வாரியம் தகவல்

இயற்கை ரப்பர் உற்பத்தி 7.5% குறைந்தது ரப்பர் வாரியம் தகவல்
2018-19-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 7.5% குறைந்தது ரப்பர் வாரியம் தகவல்
புதுடெல்லி

கடந்த நிதி ஆண்டில் (2018 ஏப்ரல்-2019 மார்ச்) இயற்கை ரப்பர் உற்பத்தி 7.5 சதவீதம் குறைந்து இருப்பதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து முதலிடம்

சர்வதேச ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தோனேஷியா இரண்டாவது இடத்திலும், மலேஷியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. வியட்நாம் நான்காவது இடத்திலும், சீனா ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

நம் நாட்டில், 2016-17-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 6.91 லட்சம் டன்னாக அதிகரித்தது. 2015-16-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (5.62 லட்சம் டன்) அது 23 சதவீத வளர்ச்சியாக இருந்தது. 2017-18-ஆம் நிதி ஆண்டில் 8 லட்சம் டன் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது 6.94 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி ஆனது.

அந்த நிலையில், சென்ற நிதி ஆண்டில் (2018-19) 6 லட்சம் டன் ரப்பர் உற்பத்தியாகும் என மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. எனினும், 6.42 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி ஆகி இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 7.5 சதவீதம் குறைவாகும். இதே காலத்தில் உள்நாட்டு இயற்கை ரப்பர் பயன்பாடு 9 சதவீதம் அதிகரித்து ஏறக்குறைய 12.12 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

ரப்பர் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்தில் இருந்தாலும் உள்நாட்டில் தேவை அதிகமாக உள்ளதால் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. நம் நாட்டில் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் ரப்பரை இறக்குமதி செய்கின்றன. பொதுவாக மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாட்டில் வாகன டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் ரப்பரை இறக்குமதி செய்கின்றன.

2015-16-ஆம் நிதி ஆண்டில் இயற்கை ரப்பர் இறக்குமதி 4.58 லட்சம் டன்னாக இருந்தது. 2016-17-ஆம் ஆண்டில் ரப்பர் இறக்குமதி 4.26 லட்சம் டன்னாக குறைந்தது. 2017-18-ல் அது 4.69 லட்சம் டன்னாக உயர்ந்தது. சென்ற நிதி ஆண்டில் ரப்பர் இறக்குமதி 24 சதவீதம் அதிகரித்து 5.82 லட்சம் டன்னைத் தாண்டி இருக்கிறது.

5 சதவீத பங்கு

சர்வதேச அளவில், இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா ஆறாவது இடத்திலும், பயன்பாட்டில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. நம் நாடு உலகின் ஒட்டுமொத்த ரப்பர் உற்பத்தியில் சுமார் 5 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது. உலக ரப்பர் பயன்பாட்டில் நமது பங்கு ஏறக்குறைய 8 சதவீதமாக இருக்கிறது.