ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு


ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு
x
தினத்தந்தி 15 May 2019 4:17 AM GMT (Updated: 15 May 2019 4:17 AM GMT)

முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி

இந்திய நிறுவனங்கள் தமது ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங் கள் வருமாறு:-

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.271 கோடியை இழப்பாகக் கண்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.336 கோடி லாபம் ஈட்டி இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.6,060 கோடியில் இருந்து) ரூ.6,570 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத் தின் நிகர லாபம் (ரூ.2,189 கோடியில் இருந்து) ரூ.605 கோடியாக குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் அதன் மொத்த வருவாய் (ரூ.23,365 கோடியில் இருந்து) ரூ.25,406 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.1.50 டிவி டெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

சீமென்ஸ்

சீமென்ஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண் டில் ரூ.280 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 28 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 9 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.3,461 கோடியாக அதிகரித்துள்ளது.

டெக்ஸ்மாகோ ரெயில்

டெக்ஸ்மாகோ ரெயில் அண்டு இன்ஜினீயரிங் நிறுவனம், நான்காவது காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) ரூ.33 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.25 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 30 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் (ரூ.387 கோடியில் இருந்து) ரூ.662 கோடியாக உயர்ந்துள்ளது.

மகாநகர் காஸ்

மகாநகர் காஸ் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.133 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட இது 27 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 23 சதவீதம் அதிகரித்து (ரூ.644 கோடியில் இருந்து) ரூ.793 கோடியாக உயர்ந்துள்ளது.

இக்ரா

இக்ரா நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.26 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.28 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 5 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.100 கோடியில் இருந்து) ரூ.95 கோடியாக குறைந்து இருக்கிறது.

கே.பி.டி.எல்.

கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் (கே.பி.டி.எல்), நான்காவது காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) ரூ.137 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.105 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருவாய் (ரூ.1,942 கோடியில் இருந்து) ரூ.2,499 கோடியாக உயர்ந்துள்ளது.

ரேமண்ட்

ரேமண்ட் நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.68 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.54 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந் நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.1,655 கோடியில் இருந்து) ரூ.1,837 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் 23 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.142 கோடியில் இருந்து) ரூ.175 கோடியாக குறைந்து இருக்கிறது. இதே காலத்தில் அதன் மொத்த வருவாய் (ரூ.6,025 கோடியில் இருந்து) ரூ.6,708 கோடியாக அதிகரித்துள்ளது.

அம்புஜா சிமெண்ட்

அம்புஜா சிமெண்ட் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.695 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 35 சதவீத வளர்ச்சியாகும். அப்போது லாபம் ரூ.514 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி கண்டு (ரூ.6,546 கோடியில் இருந்து) ரூ.7,093 கோடியாக அதிகரித்துள் ளது.

ஏ.பீ.பீ. இந்தியா

ஏ.பீ.பீ. இந்தியா நிறுவனம், மார்ச் காலாண்டில் ரூ.116 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.102 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 13 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.1,589 கோடியில் இருந்து) ரூ.1,869 கோடியாக உயர்ந்துள்ளது.


Next Story