சர்க்கரை உற்பத்தி 8.4 சதவீதம் குறையும அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு


சர்க்கரை உற்பத்தி 8.4 சதவீதம் குறையும அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM GMT (Updated: 15 May 2019 4:30 AM GMT)

எதிர்வரும் 2019-20 சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 8.4 சதவீதம் குறையும் அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு

புதுடெல்லி

எதிர்வரும் 2019-20 சந்தை பருவத்தில் (அக்டோபர்- செப்டம்பர்) இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 8.4 சதவீதம் குறையும் என அமெரிக்க வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.

பிரேசில் முதலிடம்

சர்வதேச சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. உள்நாட்டில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையில் உள்ளன. நமது மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மூன்று மாநிலங்களின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. சர்க்கரை உற்பத்தியில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.

2013-14 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) சர்க்கரை உற்பத்தி 2.83 கோடி டன்னாக இருந்தது. 2015-16 பருவத்தில் அது 2.51 கோடி டன்னாக குறைந்தது. 2016-17 பருவத்தில் 2.03 கோடி டன்னாக சரிந்தது. ஆனால் கடந்த 2017-18 பருவத்தில் புதிய சாதனை அளவை எட்டி 3.25 கோடி டன்னாக அதிகரித்தது.

நடப்பு 2018-19 சந்தை பருவத்தில், ஏப்ரல் வரையி லான முதல் 7 மாதங்களில் நாட்டில் மொத்தம் 3.21 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகி உள்ளது. இதில் உத்தரபிரதேசத்தில் உற்பத்தி அதிகபட்சமாக 1.13 கோடி டன்னாக அதிகரித்து இருக்கி றது. அடுத்து மகாராஷ்டிரா வில் 1.07 கோடி டன்னும், கர்நாடகாவில் 43 லட்சம் டன்னும் உற்பத்தி ஆகி இருக் கிறது.

நடப்பு 2018-19 பருவத்தில் இந்திய சர்க்கரை ஆலைக ளின் ஒட்டுமொத்த உற்பத்தி 3.30 கோடி டன்னாக அதிகரிக்கும் என இஸ்மா மதிப்பீடு செய்துள்ளது. அடுத்த பருவத்தில் (2019 அக்டோபர்-2020 செப்டம் பர்) உற்பத்தி 2.80 கோடி டன் முதல் 2.90 கோடி டன் வரை இருக்கும் என சில மதிப் பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எதிர்வரும் பருவத்தில் இந்தியாவில் 3.03 கோடி டன் சர்க்கரை உற்பத்தி ஆகும் என்றும், இது நடப்பு பருவத்தை விட 8.4 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் அமெரிக்க வேளாண் துறை முன்னறிவிப்பு செய் துள்ளது.

அமோக உற்பத்தி

கடந்த 2017-18 சந்தைப் பருவத்தின் அமோக உற்பத்தி காரணமாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டில் கையிருப்பை குறைக்கவும் சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதே போன்று இறக்குமதியாகும் சர்க்க ரைக்கு வரி 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.


Next Story