சிறப்புக் கட்டுரைகள்

மொத்த விலை பணவீக்கம் 3.07 சதவீதமாக குறைந்தது + "||" + Inflation declined to 3.07 per cent

மொத்த விலை பணவீக்கம் 3.07 சதவீதமாக குறைந்தது

மொத்த விலை பணவீக்கம் 3.07 சதவீதமாக குறைந்தது
ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 3.07 சதவீதமாக குறைந்தது
புதுடெல்லி

சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) 2.9-3 சதவீதமாக இருக்கும் என்றும், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 3.9 சதவீதமாக உயரும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்து இருக்கிறது...

ஏப்ரல் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 3.07 குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் அது 3.18 சதவீதமாக இருந்தது.

கொள்கை முடிவுகள்

பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக் கிறது. இவ்வங்கி முன்பு மொத்த விலை பணவீக்கம் அடிப்படையில் தனது கொள்கை முடிவுகளை எடுத்து வந்தது. ஆனால் இப்போது சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தையே கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இதனால் பணவீக்கத்தை துல்லியமாக அளவிட முடியும் என பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.76 சதவீதமாக குறைந்து இருந்தது. அதே சமயம் பிப்ரவரி மாதத்தில் 2.93 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாக மேலும் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்தில் 3.07 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

உற்பத்திப் பொருள்கள்

ஏப்ரல் மாதத்தில் உற்பத்திப் பொருள்கள் பிரிவில் மொத்த விலை பணவீக்கம் 1.72 சதவீதமாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 2.16 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சார பிரிவில் இந்தப் பணவீக்கம் (5.41 சதவீதத்தில் இருந்து) 3.84 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

சில்லரை விலை பணவீக்கம்

2012 ஜனவரி மாதத்தில் இருந்து நுகர்வோர் விலை பணவீக்கம் (சி.பி.ஐ) எனப்படும் சில்லரை விற்பனை விலை பணவீக்க புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த பணவீக்கம் கிராமம், நகரம் மற்றும் நாடு (நகரங்களும், கிராமங்களும்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.

மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 2.86 சதவீதமாக இருந் தது. அது 3 மாதங்களில் இல்லாத உயர்வாகும். ஏப்ரல் மாதத்தில் இப்பணவீக்கம் 2.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. அசைவ உணவு பொருள்கள் உள்பட உணவுப் பண்டங்களின் விலை அதிகரித்ததே இதற்கு காரணமாகும்.

பருப்பு வகைகள்

ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்கள் பணவீக்கம் 1.1 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 0.3 சதவீத அளவிற்கே இருந்தது. பருப்பு வகைகளைப் பொறுத்தவரை சில்லரை விலை பணவீக்கம் (2.25 சதவீதத்தில் இருந்து) 0.89 சதவீதமாக குறைந்துள் ளது.

தானியங்கள் மற்றும் தானிய தயாரிப்புகள் பண வீக்கம் (1.25 சதவீதத்தில் இருந்து) 1.17 சதவீதமாக குறைந்துள்ளது. காய்கறிகள் பிரிவில் அது 2.87 சதவீத மாக உயர்ந்து இருக்கிறது. மார்ச் மாதத்தில் அது மைனஸ் 1.49 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி மதிப்பீடு

பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) முதல் முறையாக ஏப்ரல் மாதம் 4-ந் தேதி (வியாழக் கிழமை) தனது நிதிக் கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அப்போது வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்தது. எனவே ரெப்போ ரேட் 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) 2.9-3 சதவீதமாக இருக்கும் என்றும், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 3.9 சதவீதமாக உயரும் என்றும் ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்து இருக்கிறது.

அடுத்த ஆய்வுக்கூட்டம்

பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை முடிவுகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளி யிடப்படுகின்றன. இவ்வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் ஜூன் 3-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு தினங்கள் நடைபெறும். வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 6-ந் தேதி (வியாழக்கிழமை) வெளிவரும்.


தொடர்புடைய செய்திகள்

1. 6 வருடங்களில் பாகிஸ்தானின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியது
கடந்த சில மாதங்களாக பெட்ரோலிய பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதன்பிறகு மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களின் அதிகரிப்பு ஆகியவை அந்நாட்டின் மொத்த பணவீக்கத்தை அதிகரித்து உள்ளது.