சிறப்புக் கட்டுரைகள்

ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு + "||" + January-March quarter ending fiscal year

ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு

ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவு
முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள்
இந்திய நிறுவனங்கள் தமது ஜனவரி-மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

சோபா

சோபா நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.113 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 63 சதவீத உயர்வாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 76 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,423 கோடியாக உயர்ந்துள்ளது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.296 கோடியாக இருக்கிறது. மொத்த வருவாய் ரூ.3,516 கோடியாக உள்ளது.

யூ.பி.எல்

யூ.பி.எல் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.206 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.737 கோடியயாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.5,809 கோடியில் இருந்து) ரூ.8,573 கோடியாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில் (2018-19) இந்நிறுவனம் ரூ.1,447 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.2,022 கோடியாக இருந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, சென்ற நிதி ஆண்டிற்கு, ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.8 டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவனத்தின் பொன் விழா ஆண்டை முன்னிட்டு 2 பங்குகளுக்கு 1 என்ற விகிதத்தில் போனஸ் பங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தரம் பைனான்ஸ்

சுந்தரம் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், நான்காவது காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) ரூ.32 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.15 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.23 கோடியில் இருந்து) ரூ.43 கோடியாக உயர்ந்துள்ளது.

2018-19-ஆம் இந்நிறுவனம் ரூ.121 கோடி வருவாயில் ரூ.85 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டில் வருவாய் மற்றும் லாபம் முறையே ரூ.76 கோடி மற்றும் ரூ.54 கோடியாக இருந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.75 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

என்.எஸ்.இ.

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு நிறுவனம் (என்.எஸ்.இ), மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் ரூ.1,708 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.1,461 கோடியாகஇருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.3,033 கோடியில் இருந்து) ரூ.3,515 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த செலவினம் (ரூ.958 கோடியில் இருந்து) ரூ.1,215 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

ஜூபிலண்ட் லைப்

ஜூபிலண்ட் லைப் சயின்சஸ் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.101 கோடியை நிகர இழப்பாகக் கண்டிருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.152 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.2,275 கோடியில் இருந்து) ரூ.2,379 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) இந்நிறுவனத்தின் நிகர லாபம் (ரூ.634 கோடியில் இருந்து) ரூ.577 கோடியாக குறைந்து இருக்கிறது. அந்த ஆண்டில் மொத்த வருவாய் (ரூ.7598 கோடியில் இருந்து) ரூ.9,147 கோடியாக உயர்ந்துள்ளது.

சி.இ.எஸ்.இ.

சி.இ.எஸ்.இ. நிறுவனம், நான்காவது காலாண்டில் (2019 ஜனவரி-மார்ச்) ரூ.309 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 9 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் (ரூ.1,852 கோடியில் இருந்து) ரூ.1,734 கோடியாக குறைந்துள்ளது.

2018-19-ஆம் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.10,275 கோடியில் இருந்து) ரூ.10,664 கோடியாக அதிகரித்துள்ளது.

அரவிந்த்

அரவிந்த் நிறுவனம், ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.67 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.115 கோடியயாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.1,863 கோடியில் இருந்து) ரூ.1,879 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டிற்கு (2018-19) பங்கு ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.