சிறப்புக் கட்டுரைகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்? + "||" + What will be the decision of President Ramnath Govind?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்?
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மத்தியில் புதிய அரசு அமைவதில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால், தனிப்பட்ட முறையில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறதோ, அந்த கட்சியைத்தான் ஜனாதிபதி ஆட்சி அமைக்க அழைப்பார். இதுதான் சட்டரீதியான நடைமுறை. இதற்கு சில முன்னுதாரணங்களும் இருக்கின்றன.

1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது. அப்போது காங்கிரசுக்கு 197 இடங்களும், வி.பி.சிங்கின் ஜனதாதளத்துக்கு 143 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 85 இடங்களும் கிடைத்தன. இதனால் அப்போதைய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் புதிய அரசு அமைக்க காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்திக்கு அழைப்பு விடுத்தார். அவர் பின்வாங்கி விட்டதால், அடுத்து வி.பி.சிங்கை அழைத்தார். அதை ஏற்று வி.பி.சிங் பாரதீய ஜனதா, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

இதேபோல் 1996 தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தனிப்பட்ட முறையில் அதிகபட்சமாக 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வாஜ்பாய்க்கு புதிய அரசு அமைக்க அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அழைப்பு விடுத்தார்.

அந்த நடைமுறையையே தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் பின்பற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

2014-ல் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள்

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:-

பா.ஜனதா282
காங்கிரஸ்44
அ.தி.மு.க.37
திரிணாமுல் காங்.34
பிஜூ ஜனதாதளம்20
சிவசேனா18
தெலுங்கு தேசம்16
தெலுங்கானா ராஷ்டிர சமிதி11
மார்க்சிஸ்ட் கம்யூ.9
ஒய்.எஸ்.ஆர்.காங்.9
தேசியவாத காங்.6
லோக் ஜனசக்தி6
சமாஜ்வாடி5
ராஷ்ட்ரீய ஜனதாதளம்4
ஆம் ஆத்மி4
சிரோமணி அகாலிதளம்4
இதர கட்சிகள் மற்றும்
சுயேச்சைகள்34