நாடாளுமன்றத்துக்கு செல்லும் பெண்கள் பட்டாளம்


நாடாளுமன்றத்துக்கு  செல்லும்  பெண்கள்  பட்டாளம்
x
தினத்தந்தி 25 May 2019 5:07 AM GMT (Updated: 25 May 2019 5:07 AM GMT)

இட ஒதுக்கீடு என்றாலே போராடத்தான் வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் போலிருக்கிறது

பெண்களுக்கு நாடாளுமன்ற, சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏறத்தாழ கால் நூற்றாண்டு கால போராட்டமாக இருக்கிறது.  1996-ம் ஆண்டு நாடாளுமன்ற, சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதன்முதலாக மசோதா, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. 14 ஆண்டுகள் கழித்து 2010-ம் ஆண்டு இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் நிறைவேற்றப்படவே இல்லை. 2014&ம் ஆண்டு 15-வது மக்களவை கலைக்கப்பட்டபோது, இந்த மசோதாவும் காலாவதியாகிப் போனது. அதன்பின்னர் அந்த மசோதா உயிரூட்டப்படவே இல்லை என்பது சோகம்தான்.

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய விகிதாச்சாரம் கிடைக்கவில்லை என்ற துயரம் முதல் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து வருகிறது. அந்த தேர்தலில் 22 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2014 தேர்தலில் 66 பெண்கள் வெற்றி பெற்று மக்களவையை அலங்கரித்தனர். பல எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் பங்கேற்று சிறப்பு சேர்த்ததும் உண்டு.

இந்த 2019 தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 33 சதவீதமும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 41 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கியது இங்கு பதிவு செய்யத்தகுந்தது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 78 பெண்கள் வெற்றி பெற்றிருப்பது பெண்களுக்கு சற்றே ஊக்கமும், எழுச்சியும் தருவதாக அமைந்திருக்கிறது. ஏனெனில் கடந்த மக்களவையை விட இந்த மக்களவைக்கு கூடுதலாக 12 பெண்கள் செல்கிறார்கள்.

மாநில வாரியாக மக்களவைக்கு செல்கிற பெண் எம்.பி.க்கள் பட்டியல் இதுதான். அவர்கள் வென்ற தொகுதிகளில் அடைப்புக்குறிக்குள்:-

ஒடிசா

பிரமிளா பிசோயி (அஸ்கா)
மஞ்சுலதா மண்டல் (பாத்ரக்)
ராஜஸ்ரீ மாலிக் (ஜகத்சிங்பூர்)
சர்மிஷ்டா சேத்தி (ஜெய்ப்பூர்)
சந்திரானி மர்மு (கியோஞ்சிகர்)
(இவர்கள் 5 பேரும் பிஜூஜனதாதளம்)
அபரஜிதா சாரங்கி (புவனேசுவரம்)
சங்கீதா குமாரி சிங் தியோ (போலாங்கிர்)
(இவர்கள் 2 பேரும் பா.ஜனதா)

மேற்கு வங்காளம்

கக்கோலி கோஷ்தஸ்திதார் (பராசத்)
அபருபா பொத்தார் (ஆரம்பாக்)
நஸ்ரத் ஜகான் (பசிர்ஹத்)
சதாப்தி ராய் (பிர்பும்)
மிமி சக்கரவர்த்தி (ஜாதவ்பூர்)
பிரதிமா மொண்டல் (ஜாய்நகர்)
மாலா ராய் (கொல்கத்தா தக்சின்)
மகுவா மொய்த்ரா (கிருஷ்ணா நகர்)
சஜ்தா அகமது (உலுபேரியா)
(இவர்கள் 9 பேரும் திரிணாமுல் காங்கிரஸ்)

உத்தரபிரதேசம்

சோனியா காந்தி (ரேபரேலி& காங்கிரஸ்)
ஸ்மிரிதி இரானி (அமேதி)
ரீட்டா பகுகுணா ஜோஷி (அலகாபாத்)
சங்மித்ரா மவுரியா (பதான்)
ரேகா வர்மா (தவ்ரஹ்ரா)
சங்கீதா ஆசாத் (லால்கஞ்ச்)
ஹேமமாலினி (மதுரா) 
கேசரி தேவி பட்டேல் (புல்பூர்)
மேனகா காந்தி (சுல்தான்பூர்)
சத்வி நிரஞ்சன் ஜோதி (பதேப்பூர்)
(இவர்கள் 9 பேரும் பா.ஜனதா)

ஆந்திரா

கொடேட்டி மாதவி (அரக்கு)
சிந்தா அனுராதா(அமலாபுரம்)
சத்தியவதி (அனகாபள்ளி)
வங்ககீதா விஸ்வநாத் (காக்கிநாடா)
(இவர்கள் 4 பேரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்)

அசாம், கேரளா, தெலுங்கானா, உத்தரகாண்ட், அரியானா, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில்  இருந்து தலா ஒரு பெண் எம்.பி. மக்களவைக்கு செல்கிறார்கள். அவர்கள்:-

போபிதா சர்மா (காங்கிரஸ்-கவுகாத்தி)
ரம்யா ஹரிதாஸ் (காங்கிரஸ்-ஆலத்தூர்)
கவிதா மலோத்து (தெலுங்கானா 
ராஷ்டிர சமிதி-மகபூபாபாத்)
மாலா ராஜ்யலட்சுமி ஷா (பா.ஜனதா-டெஹ்ரிகார்க்வால்)
சுனிதா துககால் (பா.ஜனதா-சிர்சா)
அகதா சங்மா (என்பிபி- துரா)
பிரதிமா பவுமிக் (பா.ஜனதா-திரிபுரா மேற்கு)

கர்நாடகம்

ஷோபா கரந்த்லஜே (பா.ஜனதா-உடுப்பி)
சுமலதா அம்பரீஷ் (சுயேச்சை - மண்டியா)

ஜார்கண்ட்

அன்னபூர்ணாதேவி (பா.ஜனதா-கொடர்மா)
கீதா கோரா (காங்கிரஸ்-சிங்பும்)

பஞ்சாப்

ஹர்சிம்ரத் கவுர் பாதல் (அகாலிதளம் -பாடிந்தா)
பிரனீத் கவுர் (காங்கிரஸ் - பாட்டியலா)

தமிழ்நாடு

கனிமொழி (தி.மு.க.- தூத்துக்குடி)
தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.-தென்சென்னை)
ஜோதிமணி (காங்கிரஸ் - கரூர்)

ராஜஸ்தான்

ரஞ்சிதா கோலி (பரத்பூர்)
ஜஸ்கவுர் மீனா (தவுசா)
தியா குமாரி (ராஜ்சமந்த்)
(3 பேரும் பா.ஜனதா)

பீகார்

மிசா பாரதி(ராஷ்டிர ஜனதாதளம்-பாடலிபுத்திரா)
ரமாதேவி (பா.ஜனதா-சியோகர்)
கவிதா சிங் (ஐக்கிய ஜனதாதளம்-சிவான்)
வீணா தேவி (லோக்ஜனசக்தி-வைசாலி)

மத்திய பிரதேசம்

சந்தியாராய் (பிந்த்)
பிரக்யாசிங் தாக்குர் (போபால்)
ஹிமாத்ரி சிங் (ஷாடல்)
ரிதி பதக் (சித்தி)
(4 பேரும் பா.ஜனதா)

குஜராத்

பாரதி சியால் (பாவ்நகர்)
பூனம்பென் (ஜாம்நகர்)
சாரதா பென் (மகசேனா)
தர்சனா ஜர்தோஷ் (சூரத்)
ரஞ்சனா பென் பட் (வதோதரா)
(இவர்கள் 5 பேரும் பா.ஜனதா)

மராட்டியம்

சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்-பாரமதி)
பாரதி பிரவிண் பவார் (தின்தோரி)
பூனம் மகாஜன் (மும்பை வட மத்தி)
ஹீனா விஜயகுமார் கவிட் (நந்துர்பார்)
ரக்ஷா கட்சே (ரேவர்) 
(4 பேரும் பா.ஜனதா)

யூனியன் பிரதேசங்கள்

கிரண் கெர் (பா.ஜனதா-சண்டிகார்)
மீனாட்சி லேகி (பா.ஜனதா-டெல்லி)

மேலும் சில எம்.பி.க்கள் இந்த பட்டியலில் இணைய ஆக மொத்தம் 78 பெண் எம்.பி.க்கள் 17-வது மக்களவையை அலங்கரிக்க இருக்கிறார்கள்.


Next Story