அதிகாலை தோன்றும் மாரடைப்பு


அதிகாலை தோன்றும் மாரடைப்பு
x
தினத்தந்தி 26 May 2019 7:21 AM GMT (Updated: 26 May 2019 7:21 AM GMT)

மாரடைப்பு, திடீரென்று உயிரை பறிக்கும் கொடிய நோய். அது ஒருவருக்கு வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

மாரடைப்பு, திடீரென்று உயிரை பறிக்கும் கொடிய நோய். அது ஒருவருக்கு வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலருக்கு திடீரென்று மாரடைப்பு தோன்றி ஆரம்பகட்ட அறிகுறிகளை உணர்த்திவிட்டு செல்லும். சில நேரங்களில் திடீர் மரணத்திற்கும் வழிவகுத்துவிடும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மாரடைப்பு ஏற்படுவதற்கும், நேரத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரவு பொழுதை விட அதிகாலை வேளையில்தான் மாரடைப்பின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. தூங்கி எழும் நேரத்திற்கும், நோய் எதிர்ப்பு அமைப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மோன்கள், வெளிச்சம், வளர்சிதை மாற்றம், உடலியல் செயல்பாடுகள் போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த சோதனைக்கு எலிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். மனிதர்கள் மற்றும் எலிகளின் வெள்ளை ரத்த அணுக்கள் ஒரே மாதிரியாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இதயத்தின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதன் மூலமே மாரடைப்பு பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். யோகா மற்றும் தியானம் மேற்கொண்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். புகை பழக்கம், மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

Next Story