கடந்த வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்


கடந்த வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
x
தினத்தந்தி 17 Jun 2019 11:16 AM GMT (Updated: 17 Jun 2019 11:16 AM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

கடந்த வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கின் விலை 0.09 சதவீதம் அதிகரித்து ரூ.2,252.30-ல் நிலைகொண்டது.

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.56 சதவீதம் இறங்கி ரூ.1,316.95-ஆக இருந்தது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கின் விலை 0.44 சதவீதம் குறைந்து ரூ.2,436.35-க்கு கைமாறியது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கு 0.65 சதவீதம் இறங்கி ரூ.1,824.95-க்கு விலைபோனது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கின் விலை 0.66 சதவீதம் சரிந்து ரூ.2,182.40-ல் நிலைபெற்றது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கு விலை 0.68 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.277.95-ஆக இருந்தது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 0.31 சதவீதம் இறங்கி ரூ.740.40-ல் முடிவுற்றது.

* பாரத ஸ்டேட் வங்கி பங்கு விலை 0.71 சதவீதம் குறைந்து ரூ.343.85-க்கு கைமாறியது

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கின் விலை 2.10 சதவீதம் சரிவடைந்து ரூ.1,473.80-ல் நிலைகெண்டது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கு விலை 0.50 சதவீதம் சரிந்து ரூ.417.90-க்கு கைமாறியது. 

Next Story