நீர்.. நோய்..


நீர்.. நோய்..
x
தினத்தந்தி 23 Jun 2019 8:46 AM GMT (Updated: 23 Jun 2019 8:46 AM GMT)

நாட்டின் பல பகுதிகளில் வறட்சியும், நீர் பற்றாக்குறையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க முடியாமல் தடுமாறும் நிலைக்கு பல நகரங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இதேநிலை நீடித்தால் 2030-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர்த்தேக்கங்களில் தேக்கப்படும் நீரின் அளவும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெகுவாக குறைந்து இருக்கிறது.

நிதி ஆயோக் ஆய்வறிக்கையின் படி அடுத்த ஆண்டில் 21 நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களும் இடம் பிடித்துள்ளன.

நீர் ஆதாரங்களை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு மிக மோசமான நிலையை ஏற்படுத்திவிடும். தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை ஒருபுறம் இருக்க, சுத்தமான நீர் கிடைக்காமல் அதனால் நோய் பாதிப்புக்குள்ளாகி ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story