சிறப்புக் கட்டுரைகள்

பள்ளிகள் பலவிதம் + "||" + Variously Schools

பள்ளிகள் பலவிதம்

பள்ளிகள் பலவிதம்
பள்ளி திறப்பின்போது ஜெர்மன் குழந்தைகள் பரிசு பொருட்களுடன். ஜப்பான் பள்ளிக்குழந்தைகள் சுதந்திரமாகவும், தனித்தும் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு குழந்தைகளை எந்தப் பெற்றோரும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில்லை.
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். கற்க கற்க கல்லாமை தெளியும். உலகம் முழுவதும் பல வகையான கல்வி முறைகள் உள்ளன. அந்தப் பள்ளிகளில் உள்ள கல்வி முறைகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிவோம்...

* உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளிதான் உலகின் மிகப்பெரிய பள்ளியாகும். இங்கே 32 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

* நீங்கள் நிறைய வீட்டுப்பாடம் (ஹோம்ஒர்க்) எழுதுவதாக வருத்தம் அடைகிறீர்களா? இந்திய மாணவர்களைவிட சீன மாணவர்கள்தான் நிறைய வீட்டுப்பாடங்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. 13 முதல் 19 வயதுடைய சீன மாணவர்கள் வாரத்தில் 14 மணி நேரம் வீட்டுப்பாடங்கள் எழுதுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதை கணக்கிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி மாணவர்கள்தானே?

* இங்கே கோடை விடுமுறை என்றால் மே மாதம் மட்டும்தான். சிறுவர்களுக்கு மட்டுமே ஏப்ரலிலும் பாதி நாட்கள் விடுமுறை கிடைக்கலாம். ஆனால் சிலி நாட்டில் டிசம்பரின் மத்திய காலத்தில் இருந்து மார்ச் மாதம் முடிய சுமார் 3 மாதங்கள் வெயில் கடுமையாக இருப்பதால் 3 மாதங்களும் பள்ளி விடுமுறை அளிக்கப்படுகிறது! அடேங்கப்பா எவ்ளோ ஜாலியா இருக்கலாம்னு தோணுதா?

* பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்டு மாதம்தான் பள்ளி தொடங்கும். ஜூன் மாதம் வரை பள்ளி நடைபெறும். உலகின் குறுகிய பள்ளியாண்டு என்பது இங்குள்ளதுதான். அதாவது அதிக விடுமுறையுடன் குறுகிய நாட்கள் பள்ளிகள் செயல்படும். ஆனால் இங்கே பள்ளிவகுப்புகள் நீண்ட நேரம் நடைபெறும். உலகின் நீண்ட பள்ளிவேளைகள் கொண்டது பிரான்ஸ் பள்ளிகள்தான்.

* ஜெர்மனி குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும்போது மிகப்பெரிய ஐஸ்கிரீம் பவுச் பரிசாக வழங்கப்படுகிறது. அது ‘சல்டியூட்’ எனப்படுகிறது. இந்த பவுச் நிறைய பேனாக்கள், பென்சில்கள், புத்தகங்கள், தின்பண்டங்கள் இருக்கும். பள்ளி தொடங்கும் நாளிலேயே இப்படி பெரிய பரிசுப் பொருள் கிடைப்பதால் ஜெர்மன் குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறார்களாம்.

* ஹாலந்தில் குழந்தைகளுக்கு 4 வயது தொடங்கும்போது பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். சரியாக தன் பிறந்த நாளில் பள்ளியில் சேரும் குழந்தைகள் இடையில் சேர்ந்தாலும் அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களோ, குழந்தைகளோ குழப்பம் அடைவதில்லை.

* இங்கிலாந்தில் உள்ள சென்டர்பரியில் உள்ள, கிங்ஸ் பள்ளிதான் உலகின் பழமையான பள்ளியாக அறியப்படுகிறது. இந்தப்பள்ளி கி.பி.597-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போதும் இந்தப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

* ஜப்பான் பள்ளிக்குழந்தைகள் சுதந்திரமாகவும், தனித்தும் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு குழந்தைகளை எந்தப் பெற்றோரும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில்லை. வகுப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிகளில் உணவகங்களும், தின்பண்டக் கடைகளும் கிடையாது.

* பின்லாந்தில் 7 வயது வரை குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டியதில்லை. இவர்களே உலகில் மிகத் தாமதமாக பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளாக அறியப்படுகிறார்கள்.

* ஈரான் நாட்டில் மட்டும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மட்டுமே வகுப்பு எடுக்கிறார்கள். ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பு எடுக்கிறார்கள்.

* பிரேசில் நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் உணவருந்த அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே பள்ளி என்பது பண்பாடு வளர்க்கும் ஒரு இடமாக அங்கே கருதப்படுகிறது.