சிறப்புக் கட்டுரைகள்

தினம் ஒரு தகவல் - ‘ஜிமேட்’ தேர்வு என்றால் என்ன? + "||" + What is the GIMAT number choice?

தினம் ஒரு தகவல் - ‘ஜிமேட்’ தேர்வு என்றால் என்ன?

தினம் ஒரு தகவல் - ‘ஜிமேட்’ தேர்வு என்றால் என்ன?
உலகின் 110-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் 5400-க்கும் மேற்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ‘ஜிமேட்’ என்ற பெயரில் நடத்தப்படும் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
லகின் 110-க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் 5400-க்கும் மேற்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ‘ஜிமேட்’ என்ற பெயரில் நடத்தப்படும் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

“கிராஜூவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் டெஸ்ட்” எனப்படுவதுதான் ‘ஜிமேட்’ தேர்வாகும். இது படிப்பு தொடர்பான செயல்பாட்டின், ஒரு செல்லத்தக்க மற்றும் நம்பத்தகுந்த அளவீடாகும்.

ஜிமேட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டால், வகுப்பறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். இத்தேர்வுக்காக மொத்தம் 3½ மணி நேரம் ஒதுக்கப்படுகின்றது. ஆனால் திட்டமிடும்போது, மொத்தம் 4 மணி நேரத்திற்கு திட்டமிட வேண்டும். ஏனெனில், இடைவெளி நேரங்களையும் சேர்த்து, மொத்தம் 4 மணி நேரம்.

இத்தேர்வு முழுவதுமாக ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகிறது. இத்தேர்வின் குவான்டிடேட்டிவ் மற்றும் வெர்பல் பகுதிகளானது, கம்ப்யூட்டர் அடாப்டிவ் தொடர்பானவை. முந்தைய கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளித்தீர்கள் என்பதை வைத்து, இப்பகுதியில் கேள்விகள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இதில் அதிக அளவில், சரியான பதில்கள் கொடுக்க கொடுக்க, தேர்வும் கடினமாகி கொண்டே செல்லும். கேள்விகளின் கடினத்தன்மை மற்றும் அளித்த சரியான பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும். மேலும் தேர்வுக்கான ஒரு குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், உங்களின் திறனுக்கேற்ப, தேர்வு நேரத்தை அதிகரித்தோ அல்லது சுருக்கியோ அமைத்துக்கொள்ளலாம்.

ஏ.டபிள்யூ.ஏ. மற்றும் ஐ.ஆர். பிரிவுகள், தனித்தனியாக மதிப்பெண்கள் இடப்படும். அவை மொத்த மதிப்பெண் கணக்கில் வராது. மேலும் தேர்வு முடிந்தவுடன், தேர்வு மையங்களில் கிடைக்கும் அதிகாரப்பூர்வமற்ற மதிப்பெண் பட்டியல்களில் அவை இணைக்கப்படாது. அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிந்த 20 நாட்களில் கிடைக்கும். ஜிமேட் மதிப்பெண்கள், 5 வருடங்களுக்கு செல்லத்தக்கவை. உலகம் முழுவதும், சுமார் 5400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, ஜிமேட் மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் இந்தியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.

உலகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில் ஜிமேட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாதத்தில் அதிகபட்சம் 1 முறையும், ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறையும் இத்தேர்வை எழுதலாம். மேலும் தேர்வெழுத விரும்பும் குறிப்பிட்ட மையத்தின், தேர்வுக்கான கால அட்டவணை திட்டத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 13 வயது ஆகியிருந்தால், இத்தேர்வை எழுதலாம். அதேசமயம் 18 வயதுக்கு குறைந்தவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்திட்ட, எழுதப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

உலக அளவில், இந்த தேர்வெழுத 250 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன. சில நாடுகளில், இத்தேர்வு நடத்தப்படுவதற்கு வரியும் விதிக்கப்படுகிறது. ஜிமேட் தேர்வு தேதியை மாற்றியமைக்கும் அல்லது ரத்து செய்யும் விண்ணப்பதாரர்கள், கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கலாம். எனவே இந்த தேர்வு விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். இந்தியாவின் 17 நகரங்களில் 18 மையங்களில் ஆண்டு முழுவதும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.