2018-19-ஆம் நிதி ஆண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை 4% உயர்வு


2018-19-ஆம் நிதி ஆண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை 4% உயர்வு
x
தினத்தந்தி 29 July 2019 12:06 PM GMT (Updated: 29 July 2019 12:06 PM GMT)

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நம் நாட்டில், கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை ஒட்டுமொத்த அளவில் 4 சதவீதம் உயர்ந்து 11 கோடி டன்னாக இருக்கிறது.

டீசலின் பங்கு

இந்தியாவில், பயன்படுத்தப்படும் எரிபொருள்களில் டீசலின் பங்கு மட்டும் 40 சதவீதமாக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்கள் விற்பனை 4 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. இதில் பெட்ரோல் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து (8.11 கோடி டன்னில் இருந்து) 8.35 கோடி டன்னாக இருக்கிறது. டீசல் விற்பனை முந்தைய நிதி ஆண்டுடன் (2017-18) ஒப்பிடும்போது 3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அப்போது அது 2.62 கோடி டன்னாக இருந்தது.

இதே காலத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.5,615 கோடிக்கு இந்தப் பொருள்கள் இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் அது ரூ.4,850 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. ஆக, இறக்குமதி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெட்ரோலிய பொருள்கள் இறக்குமதி பன்மடங்கு உயர்ந்து ரூ.3,132 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் அது ரூ.581 கோடியாக இருந்தது. டீசல் இறக்குமதி ரூ.2,483 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 42 சதவீதம் குறைவாகும். அப்போது அது ரூ.4,269 கோடியாக இருந்தது.

உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. எனவே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. 2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

கச்சா எண்ணெய்

பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈட்டுபட்டு வருகின்றன. 

Next Story