துறவிகள் தயாரித்த முதல் ஆவி பறக்கும் காபி...


காபி
x
காபி
தினத்தந்தி 5 Aug 2019 5:36 AM GMT (Updated: 5 Aug 2019 9:34 AM GMT)

பிராமண குடும்பங்களில் காபி என்பது மிக முக்கியமான பானமாகும்.

அவர்களில் பலருக்கும் ஆவி பறக்கும் வடிகட்டிய காபியுடன் தான் பொழுது விடிகிறது. அபிசீனியா என்று அழைக்கப்பட்ட இன்றைய எத்தியோப்பியாவில் தான் காபி கண்டுபிடிக்கப்பட்டது. கல்டி என்ற ஆடு மேய்ப்பவர் காபி கொட்டைகளை கண்டுபிடித்தார் என்று நம்பப்படுகிறது. அவரின் மனைவியின் தூண்டுதலில், தானா ஏரிக்கு அருகே இருந்த மடாலயத்தில் வசித்த சில துறவிகளிடம் அவற்றை அளித்தார்.

மடாலயத்தின் குருவிடம் அதை அளித்து, அதன் விளைவுகளை பற்றி விளக்கினார். அவற்றை ‘சாத்தானின் வேலை’ என்று கருதிய குரு, அவற்றை நெருப்பில் வீசி எறிந்தார். சில விநாடிகளில் அவரின் அறை முழுவதும் வறுக்கப்பட்ட காபியின் மணம் நிரம்பியது. இதை கண்ட துறவிகள், நெருப்பில் இருந்த காபி கொட்டைகளை பொறுக்கி எடுத்து, தரையில் வீசி, அதில் எரிந்த நெருப்பை அணைக்க அவற்றை நொறுக்கினார்கள். பொடிப்பொடியான அந்த காப்பிக் கொட்டைகளின் மீது தண்ணீரை பாய்ச்சுமாறு குரு ஆணையிட்டார். இது தான் காபி பிறந்த கதை!

இரவு முழுவதும் விழித்திருந்து தன் கடமைகளை நிறைவேற்ற, அந்த துறவிகள் காபியை பருகினார்கள். இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, காபி பிரபலமானது. 

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே காபி இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. பாபா புதன் என்ற இந்திய சூபி துறவி, யேமன் நாட்டில் இருந்து கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மலைப்பகுதிகளில் இதை 1670-ல் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு காபி தோட்டங்கள் அங்கு உருவாக்கப்பட்டன. பிறகு தெற்கே உள்ள குடகு பகுதிகளுக்கு அவை பரவின.

Next Story