இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு


இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும்; சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2019 12:10 PM GMT (Updated: 19 Aug 2019 12:10 PM GMT)

கடந்த 7-ந் தேதி அன்று பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மூன்றாவது முறையாக தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது குறித்த முக்கிய அம்சங்கள் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) அன்று வெளியாகும் என தெரிகிறது...

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச நிலவரங்கள் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்து இருக்கின்றனர்.

நிகர சரிவு

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 231.58 புள்ளிகள் சரிவடைந்து 37,350.33 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 61.85 புள்ளிகள் இறங்கி 11,047.80 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். நிறுவனங்களின் ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மற்றும் உலக நிகழ்வுகள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரத ரிசர்வ் வங்கி

கடந்த 7-ந் தேதி அன்று பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மூன்றாவது முறையாக தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது குறித்த முக்கிய அம்சங்கள் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) அன்று வெளியாகும் என தெரிகிறது. இது பங்குச்சந்தை வட்டாரங்களால் கவனிக்கப்படும் முக்கிய நிகழ்வாக இருக்கும்.

ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை இந்திய நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. குறுகிய கால அடிப்படையில் இது பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த வாரத்தில் சன் பார்மா, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., பாரத் போர்ஜ், மதர்சன் சுமி, கிளென்மார்க் பார்மா, போஷ், ஜெனரல் இன்சூரன்ஸ், ஐ.டீ.பீ.ஐ. வங்கி, டி.டி.கே பிரெஸ்டீஜ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், ரிலையன்ஸ் பவர், முத்தூட் பைனான்ஸ், எஸ்.ஜே.வி.என்., ரைட்ஸ், புளூ ஸ்டார், பி.எப்.சி., அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், இப்கா லேப்ஸ், வாக்ராங்கி, டாக்டர் லால்பாத் லேப்ஸ், வோக்கார்டு, ஈடல்வைஸ் பைனான்சியல், அசோக் பில்டுகான் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தமது வளர்ச்சிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டன.

புராக்டர் அண்டு கேம்பிள்

நிதி நிலை முடிவுகள் சீசன் நிறைவடைய உள்ள நிலையில், நடப்பு வாரத்தில் புராக்டர் அண்டு கேம்பிள், சி.ஜி. பவர் அண்டு இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ், குவாலிட்டி, ஆப்டோ சர்க்யூட்,வலேசா இன்ஜினீயரிங், கில்லெட் இந்தியா உள்பட பல நிறுவனங்கள் தமது வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இது அந்தப் பங்குகளின் விலை நிலவரங்களில் தாக்கம் ஏற்படுத்தும்.

2018-19-ஆம் நிதி ஆண்டு தொடர்பாக முக்கிய புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதல் காலாண்டு (2019 ஏப்ரல்-ஜூன்) தொடர்பாகவும், முதல் அரையாண்டு (ஜனவரி-ஜூன்) தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

ரூபாயின் வெளிமதிப்பு

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற மற்ற சர்வதே நிலவரங்களும் இந்த வார வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Next Story