வானவில் : ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்


வானவில் : ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்
x
தினத்தந்தி 21 Aug 2019 8:05 AM GMT (Updated: 21 Aug 2019 8:05 AM GMT)

கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது ஐ10 மாடலாகும். இந்த மாடலில் தயாரான கார்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாகத் திகழ்கிறது.

ஐ10 மாடலுக்கு உலகம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து இதில் மூன்றாவது தலைமுறை மாடலை இந்நிறுவனம் கிராண்ட் ஐ 10 நியோஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஹேட்ச்பேக் மாடல் கார்களில் இது முன்னோடியாகத் திகழும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

முதலில் ஐ10 மாடலும், அதைத் தொடர்ந்து கிராண்ட் ஐ10 மாடலும் வந்தன. தற்போது மூன்றாவது தலைமுறை மாடலாக கிராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 கண்கவர் வண்ணங்களில் (பியரி ரெட், போலார் ஒயிட், டைபூன் சில்வர், டைட்டன் கிரே, அக்வா டீல் மற்றும் ஆல்பா புளூ) வெளிவந்துள்ளது.

பி.எஸ்6. புகை விதிமுறைகளுக்கேற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளது. 83 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினும், டீசல் என்ஜின் மாடலும் வெளிவந்துள்ளன. இவை இரண்டிலுமே மானுவல் கியர் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி கொண்டது. இந்த மாடல் கார் மாருதி சுஸுகி ஸ்விப்ட், போர்டு பிகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

Next Story