சிறப்புக் கட்டுரைகள்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான் + "||" + Employment News: The call is for you

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்

வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
இஸ்ரோவில் வேலை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் (isro) தற்போது டெக்னீசியன், டிராப்ட்ஸ்மேன், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
டெக்னீசியன் பணிக்கு 39 இடங்களும், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 35 இடங்களும், டிராப்ட்ஸ்மேன் பணிக்கு 12 இடங்களும் இதில் உள்ளன. பிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிளம்பர், வெல்டர், மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், சிவில் பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. 

விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 13-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். செப்டம்பர் 13-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.isro.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

ஒளிபரப்பு பொறியியல் நிறுவனம்

மத்திய ஒளிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனமான பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தில் தற்போது ஜூனியர் என்ஜினீயர், மெயின்டனர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெயின்டனர் பணிக்கு மட்டும் 42 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல் டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பட்டதாரி என்ஜினீயர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரோமெக்கானிக், பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் www.becil.com என்ற இணைய தளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 16-ந் தேதியாகும்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதுநிலை படிப்புடன், நெட், செட் தேர்வு மற்றும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிஎச்.டி. ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 57 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் செப்டம்பர் 24-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அடிப் படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். இது பற்றிய விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு டெக்னீசியன், அசிஸ்டன்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
திருவாங்கூர் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் சுருக்கமாக FACT என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
3. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
செயில் உருக்கு ஆலை நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.