தமிழக சுகாதார துறையில் 405 மருந்தாளுனர் பணிகள்


தமிழக சுகாதார துறையில் 405 மருந்தாளுனர் பணிகள்
x
தினத்தந்தி 9 Sep 2019 3:54 PM GMT (Updated: 9 Sep 2019 3:54 PM GMT)

தமிழக சுகாதார துறையில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கு 405 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ஆயுஸ் கிளினிக்’குகளில் பார்மஸி படித்தவர்களை ‘டிஸ்பென்சர்’ பணியில் நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 405 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இவை பகுதி நேர பணியிடங்களாகும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ பிரிவுகளில் பார்மஸி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

10-ம் வகுப்பு மதிப்பெண்கள் 20 சதவீதமாகவும், மேல்நிலை படிப்பு மதிப்பெண்கள் 30 சதவீதமாகவும், பார்மஸி படிப்பு மதிப்பெண்கள் 50 சதவீதத்திற்கும் கணக்கிடப்பட்டு மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்கள் “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106” என்ற முகவரியை வருகிற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.tnhealth.org என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Next Story