சிறப்புக் கட்டுரைகள்

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம்பார்மஸி டிப்ளமோ படிப்பு தகுதி + "||" + Army recruitment camp

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம்பார்மஸி டிப்ளமோ படிப்பு தகுதி

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம்பார்மஸி டிப்ளமோ படிப்பு தகுதி
சென்னை ராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகத்தின் கீழ் செயல்படும், செகந்திராபாத் ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தால் ராணுவ வீரர் (பார்மா) பணிக்கான ஆட்சேர்க்கை முகாம், தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, சேலம் 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அக்டோபர் 7-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்சேர்க்கை நடக்கிறது.

மேலும் சென்னை, திருவள்ளூர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் ஆட்சேர்க்கை நடக்கிறது.

இந்த முகாமில் 19 முதல் 25 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

பிளஸ்-2 தேர்ச்சியுடன் பார்மஸி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அவர்கள் பார்மஸி படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். மேலும், மருந்தியல் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதியும் கொண்டிருக்க வேண்டும். உயரம் 165 சென்டிமீட்டருக்கு குறையாதவர்களும், எடை 50 கிலோவுக்கு குறையாதவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இவர்கள் மார்பளவு குறைந்தபட்சம் 77 செ.மீ.யும், 5 செ.மீ. விரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். செப்டம்பர் 22-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் தேவையான சான்றுகள், அனுமதி அட்டையுடன் ஆட்சேர்க்கை முகாமில் பங்கு பெறலாம். கரீம் நகர் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் ஆட்சேர்க்கை முகாம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. காலை முதலே நடை பெறும் இந்த முகாமில் தங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள சரியான நேரத்தில் விண்ணப்பதாரர் பங்கேற்பது அவசியமாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

திருச்சியில் பயிற்சிப் பணி

திருச்சியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களை பயிற்சிப் பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 86 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 74 இடங்களும், பட்டதாரிகளுக்கு 12 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மெக்கானிக், ஆட்டோமொபைல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்களும், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் அண்ட் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான நேர்காணல் செப்டம்பர் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை http://boat-srp.com என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு செல்லவும்.