சிறப்புக் கட்டுரைகள்

சென்செக்ஸ் பட்டியலில், மகிந்திரா அண்டு மகிந்திரா பங்கு அதிகபட்ச வீழ்ச்சி + "||" + In the Sensex list, the share of Mahindra and Mahindra plummeted

சென்செக்ஸ் பட்டியலில், மகிந்திரா அண்டு மகிந்திரா பங்கு அதிகபட்ச வீழ்ச்சி

சென்செக்ஸ் பட்டியலில், மகிந்திரா அண்டு மகிந்திரா பங்கு அதிகபட்ச வீழ்ச்சி
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் நேற்று மகிந்திரா அண்டு மகிந்திரா பங்கு அதிகபட்ச வீழ்ச்சி கண்டது.
அதே சமயம் டெக் மகிந்திரா பங்கு அதிக ஏற்றம் கண்டது. மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனப் பங்கு ரூ.545-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.550-க்கும், குறைந்தபட்சமாக ரூ.535.90-க்கும் சென்றது. இறுதியில் ரூ.537.05-ல் நிலைகொண்டது. இது, கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.55 சதவீத சரிவாகும்.

திங்கள்கிழமை அன்று டெக் மகிந்திரா நிறுவனப் பங்கு தொடக்கத்தில் ரூ.710.60-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.723.60-க்கு சென்றது. இறுதியில் ரூ.719.15-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் 1.41 சதவீத உயர்வாகும்.