தினம் ஒரு தகவல் : அறுவை சிகிச்சையின் போது...


தினம் ஒரு தகவல் : அறுவை சிகிச்சையின் போது...
x
தினத்தந்தி 20 Sep 2019 8:42 AM GMT (Updated: 20 Sep 2019 8:42 AM GMT)

அறுவை சிகிச்சையில் சில டாக்டர்கள் தோல்வி கண்டிருப்பார்கள். இதை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளும், டாக்டர்களும் வெளிப்படுத்த மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுவது உண்டு.

சில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஆளில்லை என்பதற்காக உரிய மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுகின்றது. இது போன்ற நிலை நோயாளியின் உடல்நிலையில் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.

சில மருத்துவமனைகளில் புதுவித அறுவை சிகிச்சை எந்திரங்கள் வாங்கினால் அதை சரிவர பயன்படுத்த தெரியாமல் சிக்கல் நேரலாம். இதுவும் நோயாளிகளின் உடல்நிலையை பாதிக்கச் செய்யும்.

எனவே ஒரு மருத்துவர் உங்களுக்கு மிகப்பெரிய நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை நினைத்து வருந்தாமல் மேலும் வேறு சில மருத்துவர்களிடம் பரிந்துரை கேளுங்கள். இது தான் சிறந்தது.

நோயாளியின் இருதயம் சரியான அளவில் செயல்படுகிறதா? என்பதை அறுவை சிகிச்சையின் அவசரத்தில் கவனிக்க டாக்டர்கள் தவறலாம். இந்த தவறும் நடக்கக்கூடும். இதுபோன்ற இருதய பாதிப்பை சில நேரங்களில் மறைக்க வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அதை வெளியில் கூறாமலும் மறைக்கப்படலாம்.

Next Story