டைனோசர்களை அழித்த ஆயிரம் கோடி அணுகுண்டுகள்...


டைனோசர்களை அழித்த ஆயிரம் கோடி அணுகுண்டுகள்...
x
தினத்தந்தி 23 Sep 2019 9:27 AM GMT (Updated: 23 Sep 2019 9:27 AM GMT)

ராட்சத உயிரினங்களான டைனோசர்கள் விண்கல் தாக்குதலால் அழிந்ததாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ராட்சத உயிரினங்களான டைனோசர்கள் விண்கல் தாக்குதலால் அழிந்ததாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதற்கான பல சான்றுகளை அவர்கள் சேகரித்துள்ளனர்.

தற்போது ஆஸ்டின் நகரில் செயல்படும் டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அந்த விண்கல் தாக்குதல் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டுகளைப்போல ஆயிரம் கோடி குண்டுகளின் ஆற்றலுக்கு இணையான தாக்குதலை தொடுத்திருக்கும் என்று கணித்துக் கூறி உள்ளனர்.

இந்த கடுமையான விண்கல் தாக்குதல் பூமியில் சுனாமி மற்றும் காட்டுத் தீயை பரப்பியும், வளிமண்டலத்தில் சல்பர் மாசுவை அதிகரித்தும் டைனோசர்களை அழித்திருக்கும் என்று அவர்கள் குறிப்பிடு கிறார்கள். இந்த நிகழ்வால் பூமி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து, சூரியனின் ரேகைகள் நிலத்தில் விழாமல், இப்போதைய நிலைக்கு நேர் எதிராக புவியானது முற்றிலும் குளிர்ச்சியடைந்து உயிரினங்கள் வாழ வழியற்று மறைந்து போயின என்கிறது அவர்களது ஆராய்ச்சிக்கட்டுரை.

அந்த விண்கல் தாக்குதல் தற்போதைய மெக்சிகோவின் அருகில் நடந்திருக்கும் என்றும், அங்கு கிடைக்கும் வினோத பாறைகளின் தன்மையை ஆராய்ந்து இந்த ஆய்வு முடிவை வெளியிட்டு இருப்பதாக அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story