வானவில் : ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. ‘டி.பி.எக்ஸ்.’


வானவில் : ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. ‘டி.பி.எக்ஸ்.’
x
தினத்தந்தி 9 Oct 2019 9:38 AM GMT (Updated: 9 Oct 2019 9:38 AM GMT)

ஆஸ்டன் மார்டின் கார்கள் என்றாலே ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பெரும்பாலான ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஆஸ்டன் மார்டின் கார்கள் இடம்பெற்றுள்ளன. இனிவரும் படங்களிலும் இந்தக் கார் இடம்பெறுவது நிச்சயம்.

ஹேட்ச்பேக், செடான் மாடல் கார்களை மட்டுமே இதுவரையில் தயாரித்து வந்த இந்நிறுவனம் தற்போது முதல் முறையாக எஸ்.யு.வி. எனப்படும் ஸ்போர்ட் யுடிலிடி மாடல் கார்களையும் தயாரிக்க திட்டமிட்டு அதை உருவாக்கியுள்ளது. ‘டி.பி.எக்ஸ்.’ என்ற பெயரிலான இந்த கார் தற்போது சோதனை ஓட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நிறுவனத்தின் தலைமையகமான இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் என்ற இடத்திலும் ஜெர்மனியில் நுபுர்கிரிங் என்ற இடத்திலும் நடைபெறுகிறது.

இதில் 4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் உள்ளது. இது மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் ஓடியது. சோதனை ஓட்டங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ள டி.பி.எக்ஸ். மாடல் ஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. விரைவிலேயே விற்பனைக்கு வர உள்ளது.

Next Story