சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : புதிய வசதிகளுடன் ரெனால்ட் கிவிட் + "||" + Vanavil : Renault Kwid with new amenities

வானவில் : புதிய வசதிகளுடன் ரெனால்ட் கிவிட்

வானவில் : புதிய வசதிகளுடன் ரெனால்ட் கிவிட்
சிறிய மாடல் கார்களில் ரெனால்ட் நிறுவனத்தின் கிவிட் மாடல் கார் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற மாடலாகும். இந்த மாடலில் தற்போது பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இந்த மாடலின் விலை சுமார் ரூ.2.83 லட்சத்திலிருந்து ரூ.4.84 லட்சம் வரை உள்ளது.
வெளிப்புறத் தோற்றத்தில் மிகவும் அழகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மோதல் விதி மற்றும் நடைபாதைவாசிகளின் பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கேற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு வேரியன்ட் 54 ஹெச்.பி. மற்றும் 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டதாகவும், 2 வேரியன்ட்கள் 1 லிட்டர் என்ஜின், 68 ஹெச்.பி. திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

எஞ்சிய 2 வேரியன்ட்கள் 1 லிட்டர் என்ஜின் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மாடல் விலை சுமார் ரூ.2.83 லட்சம், ஆர்.எக்ஸ்.இ. 0.8 லிட்டர் விலை சுமார் ரூ.3.53 லட்சம், ஆர்.எக்ஸ்.எல். 0.8 லிட்டர் விலை சுமார் ரூ.3.83 லட்சம், ஆர்.எக்ஸ்.டி. 0.8 லிட்டர் விலை சுமார் ரூ.4.13 லட்சம் மற்றும் ஆர்.எக்ஸ்.டி. 1.0 லிட்டர் விலை சுமார் ரூ.4.33 லட்சம், ஆர்.எக்ஸ்.டி. ஏ.எம்.டி. சுமார் ரூ.4.63 லட்சம், கிளைம்பர் விலை சுமார் ரூ.4.54 லட்சம், கிளைம்பர் ஏ.எம்.டி. சுமார் ரூ.4.84 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

முந்தைய மாடலை விட தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட மாடலின் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை அதிகமாகும். வெளிப்புற தோற்றம் உள்ளிட்டவற்றுக்கு இந்த கூடுதல் விலை பெரும் பிரச்சினையாக இருக்காது என்றே தோன்றுகிறது. இதில் டிரைவர் பக்கத்தில் ஏர் பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதி கொண்டது. ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், என்ஜின் இம்மொபிலைஸர், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.