வானவில் : போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்


வானவில் : போர்ட்டபிள் ஏர் கம்ப்ரஸர்
x
தினத்தந்தி 9 Oct 2019 10:09 AM GMT (Updated: 9 Oct 2019 10:09 AM GMT)

வாகனங்கள் எப்போதுமே ஓடும் வரைதான். நடு வழியில் பஞ்சரானாலோ அல்லது காற்று இறங்கிப் போனாலோ அவ்வளவுதான். இரு சக்கர வாகனமாக இருந் தால் தள்ளிச் செல்லலாம். அதுவும் கொஞ்ச தூரம்தான்.

காராக இருந்தால் ஓரங்கட்டிவிட்டு ஸ்டெப்னி இருந்தால் அதை மாற்றி பயணத்தைத் தொடரலாம். ஆனால் பல சமயங்களில் ஸ்டெப்னியிலும் காற்று நிரப்பாமல் அவதிப்படும் சம்பவங்களும் அரங்கேறும். இதுபோன்ற சமயங் களில் உதவுவதுதான் போர்ட்டபிள் ஏர்கம்ப்ரஸர். ஏர் ஹாக் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த கம்ப்ரஸர் மோட்டார் பேட்டரியில் செயல்படக் கூடியது.

இது நான்கு சக்கரங்களுக்கும் காற்று அடிக்கும் அளவுக்கு திறன் கொண்டது. காற்றழுத்தத்தின் அளவைக் காட்டும் டிஜிட்டல் அளவீடும் இதில் உள்ளது.

கார் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவற்றுக்கும் இதன் மூலம் காற்றை நிரப்ப முடியும். இதில் 120 வாட் மோட்டார் உள்ளது. இதைச் செயல்படுத்த இதில் 2,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இந்த லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் வெவ்வேறு அளவிலான நாசில் உள்ளது.

இதன் மூலம் நீரில் செல்லும் ரப்பர் படகு, பந்து உள்ளிட்டவற்றிலும் காற்றை நிரப்ப முடியும். இதில் எல்.இ.டி. லைட் உள்ளது. இதனால் இரவு நேரத்திலும் டயரில் காற்றை நிரப்ப, ஸ்டெப்னியை கழற்றி மாட்ட இது உதவும். கையில் பிடிப்பதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் கட்டாயம் இடம்பெற வேண்டிய கம்ப்ரஸர். இதன் விலை சுமார் ரூ.4,950.

Next Story