சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : காருக்கான ‘ஸிப் பிட்’ + "||" + Vanavil : Zip Fit for cars

வானவில் : காருக்கான ‘ஸிப் பிட்’

வானவில் : காருக்கான ‘ஸிப் பிட்’
குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்கும்போது தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது மிகப் பெரும் சவாலான விஷயம். வெளியிடங்களுக்கு வந்த பிறகுதான் குறிப்பிட்ட பொருளை மறந்து வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வரும்.
பொருட்களை அப்படியே எடுத்துச் செல்வதாக இருந்தாலும், காரில் இடப் பற்றாக்குறை பெரும் பிரச்சினை. இதற்கு உதவுவதுதான் ‘ஸிப் பிட்’ எனப்படும் பை. மூன்று தனித் தனி பையாக வந்துள்ள இதை கார் பின் இருக்கையில் மாட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,850.

பொருட்களை கச்சிதமாக தனித்தனியே வைப்பதற்கு ஏற்ப இதில் வசதிகள் உள்ளன. இதனால் வரிசையாக பொருட்களை வைக்க முடியும். இதிலிருந்து பொருட்களை எடுப்பதும் எளிது. பொருட்களை அடுக்கி வைத்த பிறகு அதிக இடம் கிடைக்கும்.

அதில் சூட்கேஸ், பெட்டி உள்ளிட்ட பிற லக்கேஜ்களை வைக்கலாம். பார்ப்பதற்கு கார் அழகாக காட்சி தரும். பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி கிடப்பதையும் தவிர்க்கலாம்.